Samstag, 23. Oktober 2021

 

நாதியற்று போகாமல்

மண் குதிரையை நம்பி

ஆற்றில் இறங்கினால்

நட்டாற்றில் உயிர் போகும்


பாதி குருடனை கை பற்றி

போனதாலே

பாதியிலே வாழ்க்கை

முடிஞ்சு போச்சுது

 

நீதி நியாயம் பார்த்து வாழ்ந்தால்

நெஞ்சில் நின்மதி அற்று போகுது

சாதி சனம் பார்காமே பழகி பார்த்தாலும்


பிறவியிலே உள்ள குணம்தான்

கடைசி வரை நிக்குது?

ஆதி மனிதனை போலே

வாழ்ந்துவிட்டால்

நோயுமில்லை பிணியும் இல்லை

அகதிகளும்தான் இல்லை

 

நீ பாதி நான் பாதி என்று

வாதித்து வாதித்து

வாக்கு  வாதங்களும் கூடி

குற்றவாளி யாரு பிரதிவாதி

யாரு என்று அறியாமல் போகுது

மீதி காலம் போவது எப்படியோ?

 

சேதி கேட்டு ஓடி வர உறவும்

இல்லை என்றால்

நாதியற்று போகாமல்

பாதிமதி சூடிய ஆதி சிவன்

தாழ் பணிந்து அவன் கதியாய்

வாழ்ந்திடுவோமே!

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen