Freitag, 17. September 2021

 

தடுப்பூசி 

இரவு முழுதும் தூக்கமில்லை

காரணம் விடிஞ்சால் தடுப்பூசி போட போறாங்கள் என்று


எத்தனையோ ஊசி இதுவரை போட்டாச்சு ஆனாலும் இந்த கொரோனா (
Covid 19 ) தடுப்பூசிக்கு

இம்மட்டு பயம் அத்தனை பயமுறுத்தல்கள் இதுவரை அந்த தடுப்பூசியை பற்றி வெளியான சேதிதான் என்னையும் பயத்துக்கள்ளாக்கியது


இல்லாட்டி ஊசி போடுவதே எனக்கு ஒரு யுஜிப்பி மற்றர்
,

விடிய 5 மணிக்கே எழும்பி வெளிகிட்டு 8 மணிக்கே டொக்கர் இடத்துக்கு போனால் அங்கை றோட்டுவரை சனம் கியுவிலை நிக்கினம்

அம்மளவு சனம் தடுப்பூசியை விரும்பி போட வந்திருப்பது நல்ல விடயம் என்றே நான் நினைத்தேன், எல்லாரும் தடுப்பூசியை போட்டால்தான் இந்த நோயின் பாதிப்பு இந்த நாட்டை விட்டு போகும்

நெஞ்சு படக் படக் கென்று அடிக்க அவர்கள் தந்த பேப்பர்களை நிரப்பி கொடுத்ததும் என்னை கூப்பிட்டார்கள், நானும் பயத்தோடுதான் நடப்பது நடக்கட்டும் அம்மாளாச்சி துணை என்று தடுப்பூசியை ( Byontech ) போட்டு கொண்டன்

அது ஒன்றும் நோவலை வளக்கமாக மற்ற ஊசிகளை  ஏத்துவது போல அவர்கள் ஏற்றி விட்டார்கள் எனக்கும் பெரிதாக நோகவும் இல்லை

எனி எப்படி நோகுமா? காச்சல் வருமா? தெரியாது ஒரு 15 நிமிடம் அங்கு இருந்து விட்டு ரக்சி பிடிச்சு வீடு வந்து சேர்ந்தன், அப்பாடா என்று மனசில் ஒரு நின்மதி எனி இரண்டாவது ஊசி அடுத்த மாசம் கிடைக்கும்

இந்த  தடுப்பூசி ( Byontech ) எல்லாருக்கும் கிடைக்காது ஏதோ கடவுளின் அருள் எனக்கு கிடைச்சது

நேற்று மலை போல இருந்த பயம் இன்று பனி துளியாக உருகியது

அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து இந்த கொரோனாவை விரட்ட முடியுமானால் அதை போலே மகிழ்சி வேறு எதுவுமே இன்றைய கால கட்டத்தில் இல்லை என்பேன்

இன்று 400 பேருக்கு குறையாமல் தடுப்பூசி போட போவதாக பேசி கொண்டார்கள், கிளினிக்கில் வேலை செய்யும் பெண்கள் மெசினை விட வேகமாக ஓடி ஓடி வேலை செய்வதும், இப்படியான மருத்துவ வசதிகளும், மருந்தும் கண்டு பிடிச்சதும் எல்லாமே கடவுளின் செயல்தான் விஞ்ஞானிகள் மருந்தை கண்டு பிடித்தது என்னவோ உண்மைதான், அதற்கும் கடவுளின் அருள் இன்றி எதுவுமே நிறைவேறாது

என்பது எனது நம்பிக்கை!

Keine Kommentare:

Kommentar veröffentlichen