Mittwoch, 1. September 2021

 

இதுதானே  வாழ்க்கை சக்கரம்

வாழ்ந்தது போல் நீ நடித்தாய்

வாழ்வதாக நானும் நடித்தேன்

உலகமேடையிலே நீயும் நானும் நடிகரே

எச்சில் சோற்றை உண்பவனும்


அடுத்தவன் இலையில் எடுப்பவனும்

எல்லமே பசிக்குதான்

சிலர் வாழ்வு உடல் பசிக்குதான்

 


ஆட்டுக்கல்லு அம்மி கல்லு என

பூட்டி வைத்த வரும்

போகும் போது ஒரு கூழாம் கல்லை

கூட எடுத்து செல்லவில்லை

 காணி  வீடு என பொத்தி பொத்தி

பாத்த நிலம் இன்று

யார் யாரோ வந்து போகும்

சந்தை மடம் ஆனது

 

ஊருக்கு உலை வைப்போர்  வீட்டில்

இன்று  உலை வைக்கவில்லை

இது கொரோனா தந்த தண்டனையா

இல்லை கடவுள் கொடுத்த தண்டனையா?

யார் அறிவார் உலகில்?

 

எவர் வருவார் எவர் போவார்

என்பதும் தெரியாது

சுயநலலமான வாழ்க்கையிலே

யாரும்  உண்மை அன்பும் இல்லை

நன்றி உணர்வும் இல்லை

யார்தான் ஒட்டி இருந்தாலும்

பாடையிலே போகையிலே

யாரும் கூட வருவதுமில்லை

 

காதென்ன தோடேன்ன கழுத்து நிறைய

நகையென்ன கை குலுங்க வளையல் என்ன

பட்டென்ன பொட்டென்ன பவிசாய் வாழ்ந்தென்ன

பேய் பிடித்தால் மூலையிலே இருளோடு ஒதுங்கிடுவர்

தீயில் இட்டால் எல்லாமே தீஞ்சுதானே போய் விடும்

 

காற்றை உள்ளிழுத்து நீரை பருகி

நிலத்தில் நடந்து ஆகாயத்தை பார்த்து

கடைசியிலே தீயோடு போகுது

இந்த ஐம்பூதங்களின் சேர்கையே

இந்த உடலை தந்தது அந்த

ஐம் புதங்களினாலே உயிரும் வாழுது

அந்த ஐம் புதங்களுக்குள்ளே உடலும் சாயுது

 

சுத்தி சுத்தி பூமி வருகுது

அதில் சுத்தி சுழன்று உறவும் பெருகுது

வந்து போகும் உறவும் கூட நடக்கும் பயணியும்

பாதை மாறி போகுது பயணங்களும் மாறுது

மனித நேயம் ஒன்று மட்டும்

 மாறாது இருந்து விட்டால்

மானிட வாழ்க்கையும் மாசாக போகும்

இதுதானே  வாழ்க்கை சக்கரம்

அதுவே ஓம் என்னும் தத்துவம்

கவி  மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen