Montag, 25. Mai 2015


மத வெறி

மதம் என்னும் பேய் பிடித்து அலையாதீர்கள்!

மத வெறி பிடித்தவனும் மதம் கொண்ட யானையும்  உலகை அழிக்க என்றே புறப்படுகின்றன,

உலகம் பூரா நடக்கின்ற யுத்தங்களுக்கு காரணம் என்ன?

மதம் என்ற பேராலே இன்று உலகில் மூலைக்கு மூலை  யுத்தம்  இதனாலே எத்தனை சத்தம்?  இதனாலே எத்தனை உயிர் சேதம்? எத்தனை பணச்சேதம்? எத்தனை அழிவு?

 

மதம் என்பது  அவரவர் சொந்த விருப்பம் யாரும் யாரையும் எப்படி கடவுளை கும்பிடவேணும்  என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொருத்தரும் தானாக உணர வேண்டிய விடயமே இறையருள்.

காற்றை நாம் காணாத போதும் காற்றை நாம் உணர்கிறோம் இதை எமக்கு யாரும் சொல்லி தரவில்லை இது போல்தான் இறையருளும்.

 

இயற்கையை பார்த்து ரசியுங்கள் அந்த அழகின் படைப்பில் ஆண்டவனை காண்பீர்கள்,

அன்பு காட்டும் மனிதர்களை நேசியுங்கள் அந்த அன்பிலே ஆண்டவனை காண்பீர்கள்,

உதவும் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் அந்த கைகளிலே இறைவனின் கருணையை காண்பீர்கள்,

 

காதுக்கினிய சங்கீதத்தை கேளுங்கள்  அந்த நாதத்தின் இனிமையிலே இறைவனின் ஓங்கார  ஒலியை கேட்பீர்கள்,

நோய் தீர்க்கும் மருத்துவரை நம்புங்கள் அவரின் திறமையிலே இறைவனை காண்பீர்கள்,

 பசி தீர்கும் மனித  மனங்களை பாருங்கள் அவர்க ளிலே ஆண்டவனின் அருளை காண்பீர்கள்,

 

நீங்கள் அமைதியான வழியிலே நடவுங்கள் உங்களை சுற்றியுள்ள இடமும் அமைதியாகும் அமைதியான இடத்தில் இருந்து பாருங்கள் மனதிற்க்கு நிறைந்த  அமைதி கிட்டும்

மனதிற்க்கும் ஆன்மாவுக்கும் அமைதிய தரவல்ல விடயங்களை  மட்டுமே செய்யுங்கள் அதிலே இறைவனின் அன்பை உணர்வீர்கள்,

மதம் பற்றி பேசாமல் சும்மா இருத்தலே மேலானது,

 கண்ணை மூடி சும்மா இருங்கள் அதுவே மனதிற்க்கு  நிறைந்த அமைதியை தரவல்ல தியானமாகிறது.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen