Samstag, 9. Mai 2015


வாழ்க்கை வண்டி

ஒவ்வொரு நாளும்

வேலைகள் முடிச்சு

நின்மதியாக பெரு

மூச்சு விட்டு

படுத்து எழும்பினால்

விடிஞ்சு போச்சு

மீண்டும் அடிச்சு பிடிச்சு

அலுவல்களை பார்த்து

அவியல் துவையல்

என சமையலை முடிச்சு

மூக்கு முட்ட போட்டுப் பிடிச்சு

திரும்பி பார்தால்

அன்றைய பொழுதும்

மறைஞ்சு போச்சு

இப்படியே தொடருது பாரு

நிலையற்ற மனித வாழ்கை

தொடருது பாரு

நாளும் பொழுதும் ஓடுது பாரு

வாழ்க்கை என்னும் வண்டி

ஓடுது பாரு

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen