Sonntag, 21. Juni 2015


இறுதி யாத்திரை

இன்று ஒரு மரண ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன் 200 பேருக்கு குறையாமல் வெள்ளை காரர்கள், எல்லாரும் கறுப்பு நிற ஆடைகள், 

பிரேத பெட்டி மூடியபடிதான் இருந்தது பியாணோ வாத்தியத்திலும் மெழுகுதிரியின் ஒளியிலும் அந்த இடம் மிக அமைதியாக காட்ச்சி அளித்தது.

 

85 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நன்கு பழக்கமான எனக்கு ஆரம்பத்தில் உதவி செய்த  ஒரு பெண்மணி அவருக்கு இறக்கும் போது வயது 96

அவருடைய மரண சடங்கில் நான கலந்து கொண்ட காரணம் அவர் பணத்தாலோ, பதவியாலோ, செல்வக்காலோ உயர்ந்தவர் எனபதற்காக அல்ல அவர்  மனித நேயம் மிக்க பெண்மணி என்பதே எனது கருத்து,  பொருள், பண்டம், வீடு, மனை என்பதை சேர்ப்பதைவிட, மனித இதயங்களிலே ஒரு இடத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிபதுதான் முக்கியம் என்பதற்க்கு அடையாளமாக இவர் வாழ்ந்து காட்டியுள்ளார்.

 

அங்கு எந்த ஓலமும் இல்லை, ஒப்பாரி இல்லை, காலடி சத்தம் கூட வராமல்தான் வெள்ளையர்கள் நடந்து வந்து இருந்தார்கள்.

வாழும் போதும் அவர்கள் அமைதியை கடைப்பிடிக்குறார்கள் அதே போலே கடைசி ஊர்வலத்திலும் அமைதி யாகவே சடங்குககள் நடந்தன.

பாதர் வந்து பிரத்தனையைமுடித்ததும் அந்த பெட்டியை இழுத்து செல்ல 6 பேர் வந்தர்கள் அமைதியாக இழுத்து சென்று குழியில் பெ ட்டியை இறக்க ஒவ்வொருத்தராக பூவை எடுத்து எறிந்து அமைதியாகவே வெளியேறினர்கள்.

 

„தத்தக்க பித்தக்க நாலு கால் தாவி நடக்க இரண்டு கால் முத்தி நடக்க மூன்று கால் சுடுகாடு போக பத்துகால்“ என்பது ஒரு நொடி ஆனால் இங்கு வெள்ளையரது மரணஊர்வலத்திலே சுடுகாடு போக பதினாலு கால்.

இந்த மரண சடங்கிலே ஒரு குண்டூசி விழுந்தால் கூட கேட்க கூடிய அமைதியும் இறந்தவருக்கு ஒரு மரியதையும் கொடுத்தததை காணக்கூடியதாக இருந்தது.

 

இதே நேரம் இது ஒரு தமிழனின் மரண சடங்காக இருக்க வேணும் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவா வேணும்?

வாழும் போதும் அமைதியில்லை தமிழனுக்கு இறந்த பின்பும் அழுகை, ஓப்பாரி, சத்தம் என்று அமைதியில்லாமல்தான் சடங்குகள் நடக்கும்.

என்னத்தை சொல்ல? எத்தனை ஆண்டுகள் தமிழர் வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வெள்ளையரிடம் இருந்து நல்ல விடயங்களை கற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

 

எத்தனை திறமைகள் இருந்தாலும், எத்தன உறவுகள் இருந்தாலும், எத்தனை கோடி பணம் இருந்தாலும் யாவருக்கும் நிலையானது இந்த இறுதி நிலைதானே? ஸ்மாட் போன் கூட வருமா? ஸ்மாட் ரிவிதன் கூட வருமா? யாவும் மண்ணுக்கே!

கூட வருவது நாம் மற்றவர்களுக்கு செய்த நன்மையும் நமது பாவ புண்ணியமும்தானே?

 

சம்போ  சிவ சம்போ   சம்போ  சிவ சம்போ! 

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen