Samstag, 9. Mai 2015


எவன் போற்ற தக்க பெரியவன்?

தனக்கு என சுயநலமாக பொருளை சேர்த்தவனை எல்லாம் பணக்காரன் பெரியவன் என்று சொல்லுபவர்கள் தான் உலகிலேயே  பெரும் மூடர்கள்,  பில்கேஜ் போன்றவர்கள் எல்லாம் பெரியவர்கள் அல்ல, இவர்கள் பணத்தை பாங்கில் வாழ விடுகிறார்கள் மனித மனங்களிலே இவர்கள் வாழ முடியாமலே போகிறார்கள், ஆனால் எவன் ஒருத்தன் மனித மனங்களில் வாழுகின்றானோ அவனே பெரியவன் என்றும் அந் நாட்டின் சிறந்த மனிதன் என்றும் போற்ற படுகிறான்.

எல்லா ஆசைகளையும் துறந்து தனக்கு என்றும் எதுவும் சேராமல் ஆண்டிகளாய் வாழ்ந்து அடுத்தவருக்காக  மருத்துவ, சாஸ்திர, சமய சம்பந்தப்பட்ட வாழ்க்கையின் முக்கிய  வழிகாட்டியாக உள்ள ஏடுகளை சேர்த்து வைத்த சித்தர்களும், தன் நாட்டையும் தன் ராஜ்யத்தையும் ராஜபோக வாழ்வையும் துறந்து ஞானியாகி போன கொளதம புத்தரையும், எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் மக்கள் மறக்கவும் இல்லை அவர்கள் மாகான்கள், போற்றதக்கவர்கள் என்பதை யாரும் மறுப்பதும் இல்லை.

தனக்கென்று வாழ்ந்தவர்களும் பணம் பொருளை சேர்த்தவர்களும் சுயநலவாதிகள், இவர்கள்  பணத்தை மட்டும் தேடினார்களே ஒளிய நின்மதியை தேடியவர்களாக இருக்க மாட்டார்கள்.

கோடி கோடியாய் பணத்தை சேர்த்தவன் எல்லாம் நின்மதியை தேடி இமயம் வரை ஓடுகின்றான் சேர்த்த பணத்தை வைத்து நீண்டநாள் உயிரோடே இருந்து அனுபவிக்க முடியாமல் நோயும் பிணியும் வந்திடுமோ அல்லது கள்ள பணம், கறுப்பு பணம் என்று பறிபோய் விடுமோ என நெஞ்சு பட பட என்று அடித்து அவனை பயபடுத்திக்கொண்டே இருக்கும் போது அவனுக்கு நின்மதிதான் ஏது?

ஆனால் ஒரு வேட்டித்துண்டோடும் வெறும் மேலோடும் திரிந்த மாகாத்மா காந்தி

எத்தனையோ கோடி  இந்திய மக்களின் மன நின்மதியை மீட்டுக் கொடுத்தார்,

இந்திய நாட்டுக்காக அதன் சுதந்திரத்துக்காக போராடினாரே ஒளிய அவர் தனக்காக எதையும் சாதிக்கவில்லை ஆனால் பிறருக்காக, நாட்டுக்காக சாதனை செய்த மகாத்மா காந்தி நாட்டில் வாழவில்லை ஆனால் எல்லார் மனதிலும் வாழுகின்ற ஒரு பெரிய மகானாக இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.

பணத்தாசை பிடித்தவரெல்லாம் யார் மனதிலும் இடம் பிடிப்பதில்லை அதனால் அவர்களை நாம் பெரியவன் என்று மதிக்கவும் தேவையில்லை பரதேசியாய் வாழ்ந்தாலும்  மனித மனங்களில் இடம் பிடித்த ஞானிகளும் மகான்களும் இன்றும் எமக்கு வழிகாட்டியாக நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் அறிவாளிகளாகும்.

உலகத்தில் பெரியவர்கள் எல்லாம் வீடு மனை பங்களா கோடி பணம் என்று சேர்காத போதும் மக்களின் அன்பை கோடி கோடியாக பெற்றவர்கள் என்பதில் ஐயம் இல்லை.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen