Samstag, 3. Januar 2015


பற்றிஸ்

என் வீட்டில் இன்று புது வருடத்துக்காகான பலகாரம் பற்றிஸ் எனக்கு பிடித்த பற்றிஸ் இன்று சுட்டு காலையிலேயே  2 சாப்பிட்டு விட்டேன்.

பற்றிஸ்சுக்கு என்றே ஒரு கதை உண்டு என்னிடம்

நான் சின்னனாக இருக்கும் போது  அம்மா வீட்டிலை பற்றிஸ் செய்வதில்லை ஆனால் ஸ்கூல் கன்ரினிலை நான் ஒவ்வொரு நாளும் 2 பற்றிஸ் வாங்கி சாப்பிடுவன் அதுக்கு மேலே வாங்க என்னிடம் அப்போது காசு இருப்பதில்லை.

காலையிலே ஸ்கூலுக்கு போகும்போது தினமும் எனது பேரனிடமும் அம்மாவிடமும் காசு வாங்கி சேர்தால் அந்த நாளை காசிலை 30 சதம் தான் என்னிடம்  கையில் இருக்கும்.

ஒரு பற்றிஸ் கன்ரினிலை 12 சதம்  2 பற்றிசும் 1 மில்க் ரொபியும் வாங்க காசு சரியாக இருக்கும்.

அம்மா கட்டி தார சாப்பாட்டை நான் கொட்டி  ரிபின் பொக்சை கழுவி வைத்துவிட்டு இந்த பற்றிஸ்சும், மில்க் ரொபியும்தான் எனக்கு மத்திய உணவாக அன்று விரும்பி சாப்பிட்டன், கட்டிக் கொண்டு போன சாப்பாட்டை நான் சாப்பிடவில்லை என்று அம்மாவுக்கு தெரிந்தால் திட்டு விழுவதுடன் அடுத்த நாள் காசும் தர மாட்டா அதனால்தான் நான் சாப்பிட்டது போ லே சொல்லிடுவன்.

அந்த 2  பற்றிஸ் சையும்  ரசித்து ருசித்து நான் சாப்பிடுவதை பார்த்துவிட்டு ஒரு பள்ளி சினேகிதி ஒரு நாள் சொன்னா  அதற்குள்ளே இருக்கும் இறைச்சி மாட்டு இறைச்சி என்று ஒரு வேளை அவவாலே வாங்க முடியவில்லை என்கிறதாலே அப்படி சொன்னாவோ தெரியவில்லை, அன்று எனக்கு மாட்டு இறைச்சியின் சுவையும் தெரியாது அதை கண்டு பிடிக்க,  எதுவானாலும் மிக்க ருசியான பற்றிஸ் எங்கள் ஸ்கூல் கன்ரின் பற்றிஸ்.

எனது பிறந்த நாளுக்கு நான் தோழிகளுக்கும் பற்றிஸ்சும், ஐஸ்சொக்கும் கன்ரினில் வாங்கி கொடுப்பன்.

ஸ்கூலை விட்டு விலகிய போதும் எனக்கு அந்த பற்றிஸ் தினமும் வாங்க முடியாமல் போய்விட்டதே என்பதே கவலை,

அதனாலே நானே பற்றிஸ் செய்ய பழகி முதன் முதலாக வீட்டிலை பற்றிஸ் செய்ய போறன் என்று சொல்லி எல்லா பொருட்களும் வாங்கி முதல் முதலாக சமையல் அறையில் நின்று கஸ்டப்பட்டு  ஒரு மாதிரி பற்றிஸ் செய்து முடிச்சுட்டன் பார்த்தால் பற்றிஸ் அதற்க்கான வடிவில் வராமல் கொஞ்சம் கோணல் மாணலாக வந்திட்டுது.

 நான் என்னமோ சுடுகிறன் என்றதும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே வேடிக்கை இவ என்னதை செய்ய போகிறா என்று கடைசியா சுட்டு முடிஞ்சதும் அண்ணன்மார் வந்து பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சினம், இதுக்கு பேரு பற்றிஸா? இது வண்ணாமூட்டை போலே இருக்கு என்று ஆனால் கொஞ்ச நேரத்திலை பார்த்தால் ஒரு பற்றிஸ் கூட மிச்சமாய் இருக்கவில்லை நான் செய்யும் போது சாப்பிட்ட ஒரே ஒரு பற்றிஸ்தான் எனக்கு அன்று கிடைத்தது.

அடுத்த நாள்தான் சொன்னார்கள் பற்றிசுக்கு சேப் சரியாக வராட்டியும் சுவை நல்லாக இருந்தது என்று அது எனக்கு அவர்கள் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டதாலே சொல்லாமலே தெரிந்த விட்டது .

ஒவ்வொரு தடவை பற்றிஸ் சுடும் போதும் எனக்கு இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வரும் காரணம் இன்னும்தான் பற்றிஸ் சரியான சேப்பில் வரவில்லையே.

 ஹஹஹஹ

கவி மீனா

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen