Sonntag, 14. Dezember 2014


விஞ்ஞானமா? அஞ்ஞானமா?
 

விஞ்ஞான அறிவு வளர்ந்து உலகில் சாதிக்காதது என்று ஒன்றுமே இல்லை, கணணி என்னும் பெட்டியிலே  உலகத்தையே காண வைத்த  விஞ்ஞானம்,  அண்ட வெளியிலே றொக்கெட் என்றும் விண்கலம் என்றும்  விமானம் என்றும் பறக்கவிட்டு வளி மண்டலத்தை எல்லாம் ஆட்டி படைக்கும் விஞ்ஞானம்,  கார் என்றும் பேரூந்து என்றும் புகையிரதம் என்றும் புவியிலே ஒட விட்ட விஞ்ஞானம், தொலை பேசி என்றும் தொலை காட்ச்சி என்றும் முழு உலகத்தையும் இணைத்து வைக்கும் விஞ்ஞானம்,  அண்டதிலிருந்து  கடவுளை ஓட்டி விட்டதாக கருதுகின்ற அந்த விஞ்ஞானத்தாலே  மனிதனின் நரம்பு மண்டலதிலிருந்து  நோய்களை மட்டும் துரத்தி விட தெரியவில்லையே!

விஞ்ஞானத்தாலே அண்ட வெளியிலே பறந்து கோள்களை எல்லாம் எட்டி பிடிக்கும்  மனிதன் போக போற உயிர்களை எட்டி நிறுத்த மட்டும் எந்த வழியும் காணில்லையே? கடவுள் படைத்த உலகமும் உயிர்களும் என்று சொன்ன போதிலும்  உலகத்திலே காண படுகின்ற அத்தனை பொருளும் மனிதன் சக்தியாலே  உருவாக்கபட்டதே,

செவ்வாய் சந்திரன்  வெள்ளி என்று எல்லா கோள்களையும் தொட்டு எட்டி கால்  வைத்த மனிதன்  மனிதனின் தலை விதிகளை மட்டும்  மாற்ற வழி தெரியாமல் நிக்கின்றானே? கோயிலை கட்டினான், கோபுரத்தை கட்டினான், கோயிலுக்குள்ளேயும் அவன் கையால் செய்த  கடவுள் சிலைகளை வைத்தே பூசைகள் செய்கிறான், அதுக்கு பேரு கடவுள் என்றும் சொல்கிறான்,  கடவுளை கூட செய்ய தெரிந்த அறிவாளிக்கு மனிதனின் தேவைகளை பூர்தி செய்ய மட்டும் வழி தெரியவில்லையே ஏன்?

உலகில் வறுமை, பிணி, யுத்தம், கொலை, கொள்ளை  என்றே  உலகம் எங்கும் அழுகிறார்கள் மனிதர்கள் , அவர்கள் துன்பங்கள் துடைக்க விஞ்ஞானம் வழி இன்னும் காட்டவில்லையே?  எத்தனை மருந்துகள் கண்டு பிடிக்க பட்ட போதும் ,எத்தனையோ மருத்துவ மனைகள்  கட்ட பட்ட போதும்  உலகெங்கும்  நோயால்  அழுந்துவோர் பெருகி கொண்டே போகிறார்கள் அது ஏன்?

நாளுக்கு நாள் நோயளிகள் தான்  நாட்டில்  கூடி கொண்டு போகிறார்கள் உடல்  நோயாளிகளும், மன நோயளிகளும் படுகின்ற அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல விஞ்ஞானம் வளர்ந்தும் மனிதர்கள் மன நிறைவோடு வாழ்வதில்லை நோய்கள் இல்லா உலகத்தை படைக்க யாரால் முடிந்தது? மரணம் என்பதை இல்லாமல் செய்ய யாரால்தான் முடிந்தது? கடவுளாலும்  முடியவில்லை மனிதராலும்  முடியவில்லை விஞ்ஞானமும் உதவவில்லை அஞ்ஞானமும் உதவவில்லை.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்அந்த நிரந்தர நின்மதியை மனிதர்கள் காணும் நாள்தான் எதுவோ? மனிதர்களுக்கு சாகா வரம் கொடுக்க யாராலும் முடிவதில்லை   மரணமும் ஐனனமும் தானே வருகுது தானே போகுது ஐனனத்தை தடுத்தாலும் மரணத்தை வெல்ல யாராலும் முடிவதில்லை மனிதனுக்கு வேண்டியது விஞ்ஞானமா? அஞ்ஞானமா? என்பது கூட யாருக்கும் புரியவில்லை.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen