Donnerstag, 20. Februar 2014


பயம்

(அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமல் வாழ்வது திறமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு)

 

பயம் என்றால் என்ன என்று தெரியாமல் பிறக்கின்றது குழந்தை அந்த குழந்தையின் அலறல் கேட்டு பெற்றவள்தான் பயந்து ஓடுவாள் என்ன நடந்தது என தெரியாமல் ஒவ்வொரு குழந்தையும் வளரும் போதுதான் பயம் என்னும் உணர்வுக்கு தள்ள படுகின்றது

வளரும் போது பெற்றவருக்கு பயந்து,  சில சயமயங்களில் அவர்கள் சொல்லும் பேய் பூச்சாண்டி பிச்சைகாரன்  என்ற கதைகளை கேட்டு பயந்து, பள்ளி பருவத்தில் ஆசிரியருக்கு பயந்து,  பரீட்சை நேரம் பாஸ் வருமா பெயிலாகுவமா என பயந்து, பருவ வயதில் சமுதாயத்துக்கும் தன் உணர்வுகளுக்கும் பயந்து

வேலை கிடைகாவிடில் எதிர்காலத்தை நினைத்து, பயந்து வேலை கிடைத்தால் முதலாளிக்கு பயந்து,  காதலித்தால் பெற்றுவர்கள் எதிர்பார்களா என பயந்து

கல்யாணம் இல்லை என்றால்  ஊரார் வாய்க்கு பயந்து கல்யாணத்தின் பின் கணவனுக்கோ, மனைவிக்கோ பயந்து  பிள்ளை இல்லை என்றால் மலடி என்று சொல்வார்களே என பயந்து பிள்ளைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை எண்ணி பயந்து பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்கள் கோவிக்காமல் இருக்க வேணும் என பயந்து

நாற்பதுக்கு மேலே நோய்க்கு பயந்து,    பணம் இருந்தால் கள்ளனுக்கு பயந்து, பணம் இல்லாட்டி வறுமைக்கு பயந்து,  காலம் பூராய் இப்படியே பயந்து பயந்து வாழ்க்கையை ஓட்டுகிறான் மனிதன்

வசதியில்லாதவன் அடுத்த நேரம் உணவுக்கும், உடைக்கும் என்ன வளி என எண்ணி அஞ்சுகிறான் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வருகின்ற கடிதங்கள் யாவும் என்ன கட்டு காசு கட்ட சொல்லி  வருகிறதோ என அஞ்சி அஞ்சியே வாழ்கின்றனர்.

சிலர் இல்லற வாழ்விலே நித்தம் நித்தம் சண்டை சச்சரவுக்கு பயந்து எந்த நேரமும் என்ன பிரச்சனை சண்டை வருமோ என அன்பில்லா வாழ்க்கையை பிள்ளைகளுக்காவும், ஊருக்காகவும், உறவுக்காகவும் அடிமைகள் மூட்டையை சுமப்பது போலே அன்பில்லா இல்லறத்தை வேதனையுடன் சுமந்து கொண்டே வாழுகிறார்கள்.

இதைவிட அடிக்கடி காலங்களின் மாற்றமும் இயற்கையின் சீற்றமும் வேறே பயத்தை கொடுக்க  புயல் வருமா? சுனாமி வருமா? பூகம்பம் வருமா? என இயற்கை வேறே இம்சை கொடுக்க அரசியல்வாதிகளாலே நாட்டிலே போரும் மூண்டு குண்டு வெடிப்புக்கும், பொலிஸ்சக்கும், ஆமிக்கும் ,   தீவிரவாதிகளுக்கும் பயந்து நடுங்கி  சொந்த வீடடையுடம் நாட்டையும் உறவுகளையும் விட்டு ஓடி  நாடு விட்டு நாடு ஓடி அகதியாகி அன்னிய நாட்டிலே அன்னியனுக்கும் பயந்து, அன்னிய மொழி தெரியாமல் பயந்து அலைந்து  எப்ப பிடிச்சு திருப்பி அனுப்புவானோ என பயந்து பயந்தே காலம் ஓடி

சொந்த நாட்டிலே படிக்க விரும்பாத பிற பாசையை இங்கு வந்து இருப்பதற்காக விழுந்து விழுந்து படித்து அன்னிய நாட்டு பிரஜா உரிமை எடுக்க நாய், பேயாக பாடு பட்டு  அப்பாடா ஒரு மாதிரி வேற்று நாட்டிலை இடம் பிடிச்சாச்சு என்று பார்த்தால்,  வெளி நாட்டு சுகாதாரமும் சுழ் நிலையும் நேரத்தோடேயே நோய்களை கொண்டு வர  வைத்தியரிடம் மாறி மாறி போய் பயந்து சாவதே வாழ்வாக  சில பேருக்கு மரணத்தை நினைத்தே பயம்  சாவு வரும் முன்னமே அதை எண்ணி எண்ணியே தினம் பயந்து சாபவர்களும் உண்டு.

ஓவ்வொரு மனிதரின் வாழ்விலும் மகிழ்சியாக வாழ்ந்த காலங்களை விட பயந்து வாழும் காலம்தான் அதிகமாக இருபதே உண்மை பயம் இல்லாமல் ஒருவனால் வாழ முடிந்தால் அதுவே மானிட வாழ்வில் பேரின்பமாகும்.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen