Donnerstag, 20. Februar 2014


கண்கள் பனித்தன

குளிருக்கா பூமி போத்தி கொண்ட

இருள் போர்வையை விலக்கி

போன்னிற கதிர்களை வானில் பரப்பி

மெல்ல எட்டி பார்கிறான் கதிரவன்

சிலு சிலு என மார்கழி மாத

பனி காற்று உடலை வருடி செல்ல

உள்ளதில் ஓடும் எண்ணங்களோ

ஏழு வர்ணம் பூட்டிய பகலவன் தேர் போலே

ஊரை நோக்கி ஓடியது

பொல பொலவென விடியும் அழகும்

வானத்தில் சூரியன் வரையும் பொன்னிற கோலமும்

பறவைகள் கீச்சிடும் பல வித ஒலியும்

வண்ண மலர்களின் மொட்டு விரியும் காட்ச்சியும்

கோவிலில் இருந்து மணி ஓசையோடு

கலந்து வரும் மந்திரத்தின் ஓசையும்

அத்தனையும் மனதினிலே சுழன்று ஓடி வர

இத்தனை  இனபங்களையும் தூக்கி எறிந்து

சொந்த நாட்டை விட்டு ஓடி வந்து

என்ன சுகத்தை கண்டோம்

உண்மையான இன்பங்களை இழந்து

விட் டோம் என நினைக்க கண்கள் பனித்தன

புல் நுனியில் பனி துளி போலே
கண்ணின் ஓரம் நீர் துளி
 

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen