Samstag, 14. Dezember 2013


திட்டாதீர்கள்

பண்டி என்று மற்றவர்களை பேசாதீர்கள் காரணம் பண்டி இறைச்சிதான் ஜேர்மனியருக்கும் ஐரோப்பியருக்கும் சுவையான முக்கிய உணவாகும்  விருந்து என்று சொன்னால் அங்கே பண்டி முழுசாக பொரிந்து கொண்டிருக்கும் பண்டி இறைச்சி இல்லாத கொண்டாட்டமே ஜேர்மனியில் இல்லை அந்த பண்டி அவர்களுக்கு கொடுக்கும் மகிழ்வை மனிதர்கள் கொடுக்க மாட்டார்கள்

எனவே எனிமேல் ஆச்சும் யாரையும் பண்டி என்று சொல்லி திட்டாதீர்கள்

நாய் என்று சிலர் அடுதவர்களை திட்டுகிறார்கள் நாய் போலே நன்றியுள்ள ஒரு மனிதனை காட்டுங்கள் பார்க்கலாம் அடிச்சாலும் காலால் உதைச்சாலும் கூட நாய் வளர்தவனை விட்டு எங்கும் ஓடி போகாது  அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் அது மற்றவர்களை கடித்து குதறி தள்ளி விடும் இந்த நன்றியுள்ள ஜீவனை போலே யார் உள்ளார்கள்?

மனிதர்கள் நன்றி என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள் எத்தனை உதவிகளை செய்தாலும் செய்யும் வரைக்கும்தான் மனிதர்கள் பல்லை காட்டி  காரியம் பார்ப்பார்கள் உதவி செய்ய முடியாது போனால் காலை வாரிவிட்டுதான் ஓடுவார்கள் அதனால் நாயை போலே என்று சொல்லி யாரையும் திட்ட வேணாம்

சனியன் என்று சொல்லி சில பேர்; திட்டுவார்கள் அந்த சனியனின் வலிமை தெரியாமல் அப்படி சொல்லுகிறார்கள் சனியன் பிடித்தால் ஒரு அரசனை கூட ஆண்டி ஆக்கி போட்டுதான் போகும் அரிசந்திர மகாராசாவை  சனியன் பிடித்ததும் நளமாகாராசனை சனியன் பிடித்ததும் கதைகளில் படித்ததில்லையா? கேட்டதில்லiயா?

சனியன் பிடித்தால் நடு வீதியில்தான் வரணும் என்பது தெரியாமல் சும்மா சனியன் என்று சொல்லி திட்டாதீர்கள்

அடுத்து சிலர் பேய் என்று சொல்லி திட்டுகிறார்கள் பேய்க்கு இருக்கும் வலிமை உயிரோடு இருக்கும் மனிதனுக்கு இல்லை பேய் உள்ள வீட்டிலை மனிதர்களை வாழ விடாது  மனிதர்களால் மனிதர்களை குடி எழுப்ப முடியாது ஆனால் பேய் குடி எழுப்பி போடும்

பேய் பிடித்தாலும் அவர்களை வாழ விடாது பேய் என்றால் சும்மாவா? அது தன்னுடைய வலிமையால்தான் நரகத்தக்கு கூட போகாமல் பேயாக உலாவி திரிகிறது எனவே பேயை கூப்பிட்டு திட்டாதீர்கள்

அதைவிட சிலர் மூதேவி என்று சொல்லி திட்டுகிறார்கள்  அட மூதேவி வீட்டுக்குள்ளே வந்தால் ஒரே தரித்திரம்தான் பிடிக்கும்  கடன் தொல்லை சண்டை வறுமை நோய் என்று உள்ள துன்பம் எல்லாம் அந்த வீட்டில் வர தொடங்கும் அங்கு வாழ்க்கையே இனிகாது போய் விடும்

எப்போதும் நாம் அதிகாலை துயில் எழுந்து வீட்டை சுத்தமாக வைத்து நாமும் சுத்தமாக இருந்து மாலை நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வீட்டில் வெளிச்சத்துடனும் கடவுள் பக்தியுடனும் இருக்க வேண்டும் என்று எனது தாயாயர் ஊரில் நெடுக சொல்லுவார் இல்லாவிடில் மூதேவி பிடிக்கும் என்று

அப்படி இல்லாமல் அழுக்கு மூட்டையாக நடு பகல் வரை தூங்கி  வீட்டையும் தன்னையும் சுத்தம் செய்யாமல் கண்டதை உண்டு வாய் கூட கழுவாமல் குளிக்காமல் கடவுளை நினையாமல் திரிபவர்க்கு மூதேவிதான் தானாக வந்து பிடிக்கிறது என்பதுதான் உண்மை அவர்களை சந்தோசமாக வாழவிடாது அவர்கள் கூட இருப்பவருக்கும் அவர்களால் தொல்லையே நேரிடும்

எனவே எனிமேல் யாரையும் மூதேவி என்று உங்கள் வாயால் சொல்லி திட்டாதீர்கள்

தீய சொல்லை சொல்வதால் அது எமக்கே வாலாயம் ஆகிவிடும்

நல்லதையே சொல்லி நல்லதை செய்திடுவோம் தீயது செய்பவர்களை இறைவனிடம் முறையிட்டு விடுவதே சால சிறந்தது

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen