Samstag, 14. Dezember 2013


நாவடக்கம்

தன் நாவின் ஒரு சுவையை தாண்ட அறியாதார் மலையளவும் காடளவும் தாண்டி அலைகின்றார் என்னே இம் மனிதர் மதி

இதை நான் சொல்ல வில்லை என்றோ இலக்கியத்தில் சொல்ல பட்டு விட்டது தனது நாவினை அடக்கி வாழ தெரியாதவர்கள்  மலைகள் காடுகள் எல்லாம் பின்பு அலைந்து வருந்துவதால் பயன் ஏதும் உண்டோ என்பது போலே பொருள் படுகிறது  இந்த இலக்கிய பாடலோடு அடங்கிய சிவகாமி சபதம் என்னும் ஒரு கதையை நான் சிறு வயதில் வாசித்த ஞாபகம்

இந்த நாக்குதான் சுவையை தேடி அலைகிறது இந்த நரம்பு இல்லாத நாவாலேதான் அடுதவர் மனம் புண் படும் படியாக வன்சொல் தீயசொல் சொல்ல படுகிறது அதனால்தானே வள்ளுவர் குறளில் சொல்லிவிட்டார் இப்படி

„தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு“

சொன்ன வார்தைகள் உனக்கு சொந்தமில்லை அதை கேட்டவர் என்றும் மறப்பதில்லை வன்சொல் சொல்லி போட்டு பின்பு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் கூட கேட்டவர் மனதை விட்டு அது அகலாது கொட்டிய கடுகும் சொன்ன சுடு சொற்களும் மீண்டும் அள்ளி எடுக்க முடியாது என்பதுதான் உண்மை

இந்த வன்சொல் அல்லது தீயசொல்லை சொல்லும் நாவை விட கூரிய ஆயுதம் வேறு இந்த உலகத்தில் இல்லை என்பேன் நாவடக்கம் அற்றோருக்கு நட்புகள் முறிகிறது உறவுகள் விலகி போகின்றது

இந்த நாக்குதானே மதுவை தேடியும் அலைகிறது மாதுவை தேடியும் அலைகிறது சுவையை தேடி அலைகிறது  சுற்றங்களை விட்டு விலக செய்கிறது ஐம்பொறிகளில் ஒன்றான வாய் அதற்குள்ளே அடங்கி நாவு இல்லாது போனால்

பாவங்களை செய்து பாரினில் பாவியாக நம்மை அலையவைத்துவிடும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen