Sonntag, 25. August 2013


எங்கும் எதிலும்

முழு மதியாய் நீ வந்தால்

வெண்முகிலாய் வந்து உன்னை தழுவி செல்வேன்

தென்றலாய் நீ வீசி நின்றால்

அதில் நற் சுகந்தமாய் நான் கலந்திருப்பேன்

இன்னிசையாய் நீ ஓசை தந்தால்

அதில் ஏழு சுரமாய் நான் சேர்ந்;திருப்பேன்

மழை துளியாய் நீ விழுந்தால்

உனை தாங்கும் பூமியாய் நான் இருப்பேன்

பனி துளியாய்  நீ துளித்தால்

பசும் புல்லாய் நான் காத்திருப்பேன்

பாடும் குருவியாய் நீ பறந்தால்

நீ இளைபாறும் மரமாய் நான் தளிர்த்து நிற்பேன்

ஓடும் நதியாய் நீ வந்தால்

அதில் பொங்கும் அலையாய் நான் இருப்பேன்

மலர்களின் இதழாய் நீ விரிந்தால்

அதில் வண்ண நிறமாய் நான் ஒழிந்திருப்பேன்

எங்கும் எதிலும் நான் இருப்பேன்

உன் நினைவில் கலந்தே உறைந்திருப்பேன்

உன்னை பிரியா நானிருப்பேன்

மறுபிறவி ஒன்றிருந்தால் அதிலும்

உனை மறவாது நானிருப்பேன்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen