Dienstag, 26. Februar 2013


மை எழுத்தில்

மை இல்லை என்றால் என் பேனாவால்

எழுத முடியாது

மை எழுத்து இல்லை என்றால்

நம் தமிழில் அதிகம் பேச முடியாது

 
கருமையான கார் மேகம் கண்டு

கான மயிலும் குதித்தாடும்

அருமையான காதல் கண்டே

இளமை என்றும் சதிராடும்

புதுமை செய்யும் பெண்கள் வாழ்க்கை

புரட்ச்சியாக மாறி விடும்

முதுமை வந்த மனிதருக்கே

பழமை கலாச்சாரம் தங்கி விடும்

ஆமை புகுந்த வீடும் பொறாமை புகுந்த மனசும்

என்றும் உருப்படாமலே போய்விடும்

எளிமை கொண்ட மனிதர் என்றும் இம்மை மறுமை

வந்த போதும் கலங்காதே வாழ்ந்திடுவர்

சுமை தாங்கியாக நீ பொறுமையோடு வாழ்ந்தாலும்

தனிமை வந்து உன் வாழ்வில் இனிமை இன்றி

செய்துவிடும்

வறுமை வந்த போதும் நீ உன் கடமை செய்து வந்தால்

நேர்மையான பெண் என்று உனக்கு பேரும் புகழும் சேர்ந்து விடும்

ஆண்மை இல்லா ஆண்மகன் பெண்மை தன்னை

குறை கூறி வாழ்வதாலே

பசுமையான குடும்ப வாழ்கை நிலை குலைந்தே போய்விடும்

கண்ணை இமைதான் காப்பது போல்

என்னை காக்க ஒரு இறைவி என் பக்கம் துணை உண்டு

என்றும் என்னை காக்க ஒரு இறைவி

என் பக்கம் துணை உண்டு

கவி மீனா

 

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen