Dienstag, 5. März 2013


பெண்கள்

பிரமன் எழுதிய அடிமை சாஸனம் பெண்களுக்கு இன்று அழிந்து போய்விட்டது பொதுவாக ஆனால் வறுமை நிலவும் நாடுகளில்  வீட்டில் இன்னும் பெண்கள் தலை தூக்க முடியாமல்தான் இருக்கிறார்கள்

அடுப்பங்கரை பூனைகளாய் ஆண்களின் ஆசைக்கு காமகிளதிகளாய் மட்டுமே வாழ்ந்த பெண்ணினம் இன்று விஞ்ஞானம் கற்று விண்ணுலகம் போய் வந்து விமானத்தில் பறந்து வித்தைகள் பல கற்று எத்திசையிலும்  எத்துறையிலும் முன்னோடிகளாய்  முன்னேறி நிற்கும் நவநாகரிக யுவதிகளாய் வாழ்கின்ற போதிலும் அவர்கள் மனங்களிலே  இன்னும் வேதனைகள் ஆண்களின் அவமதிப்புகளால் உண்டாகும் காயங்கள் தீபிழம்பாக நீறு பூத்த நெருப்பாக நெஞ்சுக்கள்ளே குமுறி கொண்டுதான் இன்னமும் இருக்கிறது

என்னதான் பெண்கள் சாதித்தாலும் ஒரு தந்தை அவளை பெருமை படுத்துவார் தன் மகள் சன்றோர் என்று தானும் பெருமை கொள்ளுவார் ஆனால் அதே ஒரு கணவனால் அந்த பெண்ணினின் பெருமையை திறமையை முழுமனதாக ரசிக்க முடிவதில்லை புகழ்ச்சியை கண்டு பொறாமைதான் கொள்கிறான் காரணம் அவனால் பெண்ணை தனக்கும் மேலாக பார்க்க மனசு இடம் கொடுப்பதில்லை என்பதே காரணம் படைபின் வடிவே பெண்தான்  கடவுளின் சக் தியும் பெண்தான்  இதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்தால் மட்டுமே பெண்களுக்கு உண்டு விடிவு

பெண் விடுதலை பற்றி நாம் பேசி கொண்டே போகிறோம் என்றைக்கும் அதற்க்கு முடிவே இல்லை

பூனைகளிடம் இருந்து எலிகளுக்கு சுதந்திரம் கிடைகாது என்று பெரியார் சொன்ன கூற்று சரியாகவே உள்ளது  விவாகரத்துகள் இன்று உலகில் பெருகி கொண்டே போகிறது காரணம் ஆண் பெண் ஒற்றுமை இன்மை பெண்ணை மதிக்க தெரிந்த்தால் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும் குடும்பதில் அடிமைதனம் தலை தூக்கும் போதுதான் குடும்பங்கள் சிதறுகின்றன

இதைவிட இன்று வரை ஒரு பெண்தனியாக நடமாட முடியாமல்தானே இருக்கிறது  எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு நடக்கிறது  காமம் தலை தூக்கி ஆடும் உலகில் பெண்கள் சுதந்திரமாக தனியாக நடமாட முடியாமல் போவதுதான் உண்மை அதுகும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்

இதைவிட கொடுமை என்னவெனில் பெண்ணுக்கு பெண்தான் முதல் எதிரி ஆகிறாள்  மருமகளுக்கு ஒரு மாமி சரியா வாய்க்காவிடில் அவளது குடும்ப வாழ்கை நாசமாக போகிறது காரணம் கணவனுக்கு அவனது அம்மாதான் பெண்ணாகவும் நியாயமானவளாகவும் தெரிவதால் தன் மனைவியும் ஒரு பெண் தனது பிள்ளைகளின் தாய் என்பதை அந்த கணவன் உணரும் வரை பெண்ணுக்கு இல்லை நின்மதி அந்த குடும்பத்தில்

மேலும் கணவனின் கொடுமை தாங்க முடியாது ஒரு பெண் பிரிந்து சென்று தனியாக வாழ முயன்றால் மற்ற பெண்களுக்கு அது பிடிகாது காரணம் தாங்கள் அடியும் உதையும் ஏச்சும் பேச்சும் வாங்கி கொண்டு குடும்பதில் கிடந்து நரக வாழ்கையை வாழும் போதும் தாம் நல்லாக வாழ்வதாக வெளியில் நடித்து கொண்டு இருக்கும் பெண்கள்தான் இன்றும் அதிகம் இப்படி பட்ட பெண்களுக்கு ஒரு பெண் துணிந்து தனது விடுதலைகாக பாடு பட்டு தனித்து வாழ்ந்தால் அவளை குணம் கெட்டவளாகவும் தரம் கெட்டவளாகவும் பேசி இன்புறவது ஆற்றாண்மையில் தவிக்கும்  சில தமிழ் பெண்களின் குணமாகும்

இதனால்தான் சொல்கிறேன் பெண்ணுக்கு முதல் எதரி பெண்களே பெண்கள் வாழ்கையில் முன்னேற்றம் அடைய எப்படி ஒரு கல்வியும்  பிற மொழி அறிவும் ஒழுகமும் தேவையோ அது போலே ஒவ்வொரு ஆணும் பெண்ணை மதிக்க கற்று கொள்ள வேணும் அத்தோடு பெண்கள் சக பெண்களுடன் பொறாமை படாது ஒற்றுமையாக கஸ்டம் வரும்கால் கை கொடுத்து உதவி செய்கிற மனபாங்குடன் வாழ வேணும்

இந்த மனபாங்கு  வெளிநாட்டில் பெண்களிடம் இருபதால்தான் வெளிநாட்டு பெண்கள் நின்மதியாக வாழுகிறார்கள் ஒருதருக்கு ஒருதர் கஸ்டம் வரும் போது உதவி செய்வதுடன் அதற்கான அமைபுகளும் இங்கு காண படுகிறது

ஆனால் தமிழ் பெண்கள் ஒரு பெண்ணுக்கு கஸ்டம் வந்தால் அவளை பற்றி அவதூறு பேசி பொழுதை போக்குவதுடன் அந்த பெண்ணை மேலும் வெந்த புண்ணில் வேலை பாய்சுவது போலேதான் நடாத்துகிறார்கள்  விழுந்தவனை தூக்கி விட கைகள் இல்லை இங்கே எறி மிதிக்க கால்கள்தான் ஓடி வரும்

எனவே பெண்களே முதல் மனம் திருந்த வேணும் பெண்களுக்கு உதவி செய்ய முன் வரவேணும் இதற்கான அமைபுக்கள் உருவாக வேணும் சும்மா வாயால் பேசி பேசி ஆவது ஒன்றும் இல்லை செயலால் பெண்கள் முன்னேற வேணும் அன்னை திரேசா போலே பெண்கள் மாறாவிடிலும் எம்மால் இயன்றளவு பாதிக்கப்ட்ட பெண்களுக்கு உதவி செய்ய முதல் பெண்கள் முன்வர வேணும்

பொறாமை எரிசல் பேராசை காமம் கோபம் போன்ற தீய குணங்கள் மாறும் போது உதவி செய்யும் மனபாண்மையும் அன்பு காட்டும் தன்மையும் ஒவ்வொரு உயிரையும் மதிக்கும் குணமும் தானகவே வளரும் அப்போதுதான் உண்மையில் பெண்களுக்கும் வாழ்வும் உண்டு விடிவும் உண்டு

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen