Samstag, 14. Juni 2014


சுரக்காய்

(வாதபித்தம் வாயருசி வன்பீரி கஞ்சீதம்
ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம்-ஓதத்
திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரக்காயைத் தின்பவர்க்குச் சொல்)
--
அகத்தியர் குணவாகடம்

சுரக்காய் பற்றி அகத்தியர் சொன்ன பாடல் இது, சுரக்காய் பல சூட்டு நோய்களையும் சிறுநீரக நோய்களையும் வயிற்று புண் போன்ற நோய்களையும் குணபடுத்தவல்லதாம்.

பெரிய சுரக்காய்  ஒரு குடுவை போலே இருக்கும் அதை மரத்திலேயே முத்தி காயவிட்டு பின்னர் அதனை வெட்டாமல் மேலே காம்புடன் சிறியதாக வெட்டி உள்ளுக்குள் உள்ள காய்ந்த கொட்டைகள் எல்லாம் வெளியே எடுத்தபின் கழுவி காய வைத்து அந்த நாளையில் அதனை ஒரு பானை போலே அல்லது குடுவை போலே நீர் நிரப்பி வைக்க பாவித்தார்கள்,

அல்லது அதனை பாதியக வெட்டி கோதை சுத்தம் பண்ணி காயவைத்து  எடுத்து ஆண்டிகள் உணவு உண்ணும் பாத்திரமாக கூட பயன் படுத்தியதாக அறிந்தேன் ஆனால் இன்று சுரக்காய் தேய்ந்து சுண்டங்காய் ஆனது போலே இங்கு சிறிய சுரக்காய்கள்தான் அருமையாக கிடைக்கின்றன.
 



சுரக்காயில் பால்கறி, கூட்டு என பல விதமாக சமைக்கலாம், நல்ல மசாலா போட்டு சமைத்தால் நல்ல சுவையாக இருக்கும் சிலர் பருப்புடன் சேர்த்தும் சமைப்பார்கள்.





எப்படி சமைத்தாலும் நல்ல மருத்துவ குணம் உள்ள மரக்கறிகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியமாகும்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen