Samstag, 26. April 2014


மாயையே

பரந்த உலகத்தை சுற்றி பார்க்கிலும்

விரிந்த வானை விழித்து நோக்கிலும்

புறக்கண்ணால் காண்பவை யாவும்

மானிட வாழ்வில் மாயையே

எம்மகத்தே ஒழிந்திருக்கும் பரம்பொருளை

அககண்ணால் காண்பவரே

உண்மையை உணரும் மானிடரே

மனச்சாட்சி சொல்லும் நல் வழியே நடந்து

நல்லுறவை பேணி  நல்வார்தை பேசி

அடுதவரை மனம் மகிழ வைப்பவரே

கடவுளின் அருளை பெறுகின்ற மானிடராகின்றார்

 கவி மீனா

1 Kommentar:

  1. புறக்கண் பார்ப்போர் மெய்யறியார்
    அகக்கண் பார்ப்போர் யுகமறிவார்.

    AntwortenLöschen