Samstag, 26. April 2014


செம் பருத்தி பூ
 

(செம் பருத்தி பூவே செம் பருத்தி பூவே உள்ளம் கொண்டு போனாய் நினைவு இல்லையா? ) என்ன ஒரு இனிமையான காதல் ரசம் ஊறும் பாடல்.

இதை போலவே கண்களுக்கு விருந்தாகவும், எங்களுக்கு மருந்தாகவும் ஊரில் எங்கள் வீட்டு முற்றதிலே  பூத்து குலங்கிய அழகிய மலரை பல நிறங்களிலும் பல வடிவிலும் காட்சி தந்த செம்பருத்தி பூவை மறக்க முடியுமா?

செம்பருத்தி பூவை நாம் செவ்வரத்தை என்று சொல்வோம் இலங்கையில், இந்த பூ பல சிறந்த மருத்துவ குணங்களை கொண்டதால் இதனை அன்று வாழ்ந்த சித்தர்கள் தங்க புஷ்பம் என்று அழைத்தார்கள்.

இத் செடி கிழக்கு ஆசியாவில்தான் முதல் உற்பத்தியாகி பின் ஆசிய நாடுகள் எங்கும் பரவியதாகவும் மலேசியா என்னும் நாட்டின் தேசிய மலராகவும் இன்றுவரை உள்ளது,  இந்த மலரை சீன ரோஜா என்றும் அழைக்கபடுகிறது.

செம்பருத்தி மரத்தில் பூ, இலை, வேர் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும் மேலை நாடுகளில் இந்த பூவை பதப்படுத்தி தேயிலை போலே  விக்கிறார்கள் அதை வாங்கி  நாம் சுடு நீரில் போட்டு குடிக்கலாம்.
 

செம்பருத்தி பூ  பூசைக்கு பயன் படுவதுடன்  சமையலுக்கும் உபயோக படுத்த படுகிறது,  செந்நிற  செம்பருத்தி பூக்களை துவையல் செய்து  உண்ணலாம், காலையில் நீரில் தேசி புளியுடன் ஊற வைத்து  மாலை அதனை  வடித்து எடுத்து சீனியுடன் கலந்து நன்ங்கு பதமாக காச்சி போத்தலில் அடைத்து வைத்து சர்பத் போலே  குடி பானம் தயாரிக்கலாம்.

செம்பருத்தி பூ இதய நோய்கள், இரத்த சோகை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், போன்றவற்றை குணபடுதும் என இயற்கை மருதுவம் கூறுகிறது, இப்பூ விற்றமின் நிறைய உள்ள பூ  ஆதலால் எமது இரத்த கோளாறுகளை போக்க வல்லது.

இந்த தாவரத்தின் இலைகளை அரைத்து சம்போ போலே தலைக்கு பூசி குளிக்கலாம், நல்ல அழகான கூந்தல் வளர்வதுடன் பொடுகு, மயிர் உதிர்தல் போன்ற தொல்லைகள் இதனால் குணபடுத்த படுவதாக நம்பபடுகிறது, மேலும் இந்த இலை சாறு ஆதி காலத்தில் இனிப்பு பலகாரம் செய்யும் போது பச்சை நிறம் ஊட்டியாக பயன் படுத்த பட்டும் உள்ளது.
 

வேர் கூட மருதுவ குணம் உள்ளதாக  இயற்கை மருதுவர்கள் கூறுகிறார்கள், இந்த தாவரத்தை சீனர்களும் மருதுவ குணம் உள்ள தாவரமாகவே கருதுகிறார்கள், இதை இன்று மேலை நாடுகளிலும் உற்பத்தி செய்கிறார்கள் ஆனால் வின்ரர் காலங்களில் நாம் வீட்டுக்குள் வைத்துதான் இத் தாவரத்தை இங்கு  வளர்க்க வேண்டும், ஊரிலே வளர்வது போலே இந்த தாவரம் இங்கு அவ்வளவு பெரிதாக  வளர்வதில்லை  அதனால் வீடுகளில் உள்ளே வைக்க கூடியதாக உள்ளது.

இதன் பெயர் இங்கு Hibiscus எனபடும் பல நிறங்களிலும், பல வடிவங்களிலும் இந்த பூக்கள் காணபட்டாலும் செந்நிறத்தில் ஒற்றை இதழில் காட்சி தரும் பூக்களே மருதுவ குணம் நிறைந்தாக சொல்ல படுகிறது.
 

செம்பருத்தியில் ஒரு இனம் தூங்கு செம்பருத்தி எனப்படும் அது நீண்ட மெல்லிய காம்பில்  கீழ் நோக்கி  தொங்கும் மேலும் சிவப்பு, மஞ்சள், றோசா, வெள்ளை, ஓரெஞ் என பல நிறங்களில் ஒற்றை இதழாகவும்  அடுக்கு இதழாகவும் இப்பூக்கள்  காண படுகின்றன,  மேலை நாடுகளில் நீல நிறத்தில் கூட ஒரு சிறிய பூக்களை பூக்கும்  செம்பருத்தி இன தாவரம் உள்ளது,  காலையிலே மலர்ந்து மாலையிலே வாடினாலும்  செம்பருத்தி பூக்கள் கண்ணை பறிக்கும் அழகும், நிறைந்த மருதுவ குணமும் கொண்டதோடு பூசைக்கு விரும்பி ஏற்கபடும் மலராக பயன் தருகிறது.

ஒரு நாள் வாழ்ந்தாலும் பிறருக்கு உதவி செய்யவே இம்மலர்கள் மலர்கின்றன.

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen