Sonntag, 26. Januar 2014


பெண்

பூமி தாயும்  தாங்கிடுவாள்

சுமையை தாங்கும் வரையும் தாங்கிடுவாள்

தாங்கமுடியா தரணத்தில் பூகம்பமாய் வெடித்திடுவாள்

பெண்ணாய் பிறந்தவள் பொறுத்திடுவாள்

பொறுமையின் சிகராமாய் விழங்கிடுவாள்

பொறுக்கமுடியா பொழுதினிலே

அவளும் பொங்கியே எழுந்திடுவாள்

கண்ணை இமை போல் காத்திடுவாள்

கலங்கரை விளக்காய் ஒளி தருவாள்

குலமகள் என்றே வாழ்ந்திடுவாள்

தன் குடும்பத்துகாக உயிர் கொடுப்பாள்

குற்றம் கண்டு மனம் நோகில்

கண்ணகியாய் அவள் எரித்திடுவாள்

பத்துமாதம் சுமப்பவளே பெண்

தன் இரத்தத்தை பாலாக்கி கொடுப்பவழும் அவளே

தாய் என்னும் பேரன்பு பெட்டகமே

பெற்றவளாய் மேதினியில் பெருமை பெறுபவளே

சக்த்தியின் அம்சமே பெண் என்றால்;

சிருஸ்டியின் மூலாதாரம் பெண் என்றால்

பெண்ணை போற்றி காக்க முடியாதோர்

மண்ணை காத்தும் பயன் என்ன?

அன்பின் வடிவே பெண்

பூமியில் சிருஸ்டியில் அவளே முதல்

உயிர்களின் மூச்சும் தருபவள் அவளே

பெண்ணே போற்றத்தக்வள்

பெண்ணே உலகின் கண்

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen