Sonntag, 26. Januar 2014


பெண்களே ஆக்கமும் அழிவும்

(ஆற்றையும் கொடும் கூற்றையும் நம்பலாம்

மதயானையும் நம்பலாம்

பாயும் வேங்கையை நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பாதே)

என்று விவேக சிந்தாமணியில் கூறப்பட்டு இருக்கிறது எங்கே பார்த்தாலும் எக்காலத்திலும் பெண்ணை ஒரு கெட்டவளாகவும் ஏமாற்று காரியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது அதன் காரணம்தான் என்ன?

சேலை கட்டிய மாதர் என்னும் போது ஆண்களின் சகோதரிகளும் பெற்றதாயும் கூட அதில் அடங்குகின்றனர் தானே?

அதை மறந்து ஒவ்வொரு தமிழ் ஆண்மகனும் என் தாய் போல் எந்த பெண்ணும் இல்லை என் சகோதரி போலே யாரும் அழகு இல்லை என்று மார்தட்டி பேசி கொள்கிறார்கள் ஆனால்

பெண் என்பவள் மனைவியாக வரும் போது மட்டும் அவளை நம்ப கூடாது என்று சில ஆண்கள்  சொல்வதன் அர்த்தம் தான் புரியாமல் போகிறது இன்று மனைவி நாளை அவளும் ஒரு தாய் என்பதை ஏன் மறக்கிறார்கள் இந்த ஆண்கள்?

(ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே) என்பதுதான் உண்மை எங்கு பார்தாலும் ஒரு உயிர் உண்டாக பெண் தேவை அது ஆண்கள் இல்லாமல் பெண் உயிரை உண்டாக்க முடியாது என்றாலும் ஒரு விதை முளைக்க நல்ல பசளை நிலம் தேவை அது போலே உயிர்களுக்கு வடிவம் கொடுத்து பத்துமாதம் சுமைதாங்கி கருவில் உணவு ஊட்டி பின் மதளையில் பால் ஊட்டி ஒரு சேயை நல்ல மனிதனாக உருவாகுவது பெண்தானே?

பெண்மை என்பது உலகில் இல்லை என்றால் எந்த படைப்பும் இல்லை அது மனிதர்களாகவோ விலங்குகளாகவோ மரம் செடி கொடிகளாகவோ இருக்கலாம்  இந்த உலகில் நாம் காணும் காட்சிகளில் எங்கும் பெண்மை நிறைந்து இருக்கின்றது

அதனால்தான் இந்த உலகை ஆட்டி படைக்கும் ஆண்டவன் என்று சொல்ல படுகின்ற கண்ணுக்கு தெரியாத வலிமைக்கு கூட சக்தி என்று பேர் வைத்துள்ளார்கள் அன்று யாவும் அறிந்த ஞானிகள்

என்னதான் பெண்களை இழிவாக பேசுபவர்களும்  பெண்மை அருகில் இல்லை என்றால் பலன் இழந்து புகழ் இழந்து தான் போகிறார்கள் அதனால்தானோ உண்மை அறிந்தவன் சொல்லி வைத்தான் அன்று

(ஒரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னாலே ஒரு பெண் இருக்கின்றாள் என்று ) அது தான் உண்மை இதை சில ஆண்கள் ஒப்பு கொள்ள மறுக்கின்றார்கள் ஆனால் பெண்மை அவனை விட்டு பிரியும் போது அந்த உண்மை அவனுக்கே நிச்சயம் புரிகிறது

பெண் என்பவள் என்றும் அன்பு காட்டி அரவணைக்க பட வேண்டியவள்  பெண்கள் வாழ்வில் கண்கள் போலே பாது காக்க பட வேண்டியவள்  என்பதை ஆண்கள் உணர்ந்து நடந்தாலே வாழ்கை இனித்துவிடும்

என்றும் இல்லற வாழ்க்கை இனித்து விடும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen