Sonntag, 17. November 2013


கார் த்திகை பௌர்ணமி
 

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும்

பௌர்ணமியில் விசேடமானது கார்த்திகை பௌர்ணமியே கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வருவதால்  சந்திரன் மிகுந்த ஒளியுடன் பிரகாசமாக காட்ச்சி அளிக்கும்

அன்று விரதம் இருந்து சிவபெருமானை துதிப்போருக்கு  சிவபெருமான் தேவியுடன் பூமிக்கு அருகே வந்து அருள்புரிவதாக நம்பப்படுகிறது

இன்நாளில்தான் சிவபெருமான் வானாளாவிய ஜோதிவடிவாக நின்றதாகவும் அடி முடி தேடி பிரம்மாவும் விஸ்னுவும் அவரை கண்டு கொள்ள முடியாமல் போனதாகவும் நமது இந்துமதம் கூறுகிறது

இதற்காகவே ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்களை கொழுத்தி நாம் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுகிறோம்

அத்துடன் இன்று முருக பெருமானுக்கும் விசேட நாளாகும் கார்த்திகை பெண்கள் முருகனை வளர்த்ததாலும் கார்த்திகேயன் என அழைக்கபடும் முருகன் கார்த்திகை நட்சத்திரத்தில் அம்பிகை அருளால் ஒரு முக கடவுளானாதாகவும் சொல்லபடுகிறது  இன்நாளில் முருகனை வழிபடுவோருக்கும் முருகப்பெருமானின்  அருள் கிட்டுவதுண்டு  அப்பனுக்கும் மகனுக்கும் இன்று ஒரு முக்கிய தினம் ஆகும்

இந்நாளில் கங்கையில் விளக்குகளை எரியவிட்டு மிதக்க வைப்பது பெண்களின் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது  இத் திருநாளில் பாவையர் வளக்குகளை ஆற்றில் விடுவது பற்றி சிலபதிகாரம் மணிமேகலை போன்ற பண்டைய இலக்கிய நூல்களில் மிக சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது

இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் மேலும் மற்ற நாடுகளிலும் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த அனைவரும் விளக்குகளை ஏற்றி   நாடெங்கும் ஒளி வெள்ளதில் மிதக்க வைப்பார்கள் இந்த காட்ச்சியை  கார்த்திகை தீப திருநாளை  கண்டு மகிழ கொடுத்து வைக்க வேணும்

கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள் மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்

எங்கும் தீப ஒளியும் அகல்விளக்கும் ஒளி வீச  ஆலயங்களில் சொர்க்கப்பானை கொழுத்தி ஆராதிக்க திருவண்ணாமலை தீபம் ஜெக ஜோதியாக காட்ச்சி அழிக்க

வானதிலே பௌர்ணமி நிலா வண்ண அழகோடு காட்ச்சி தர இவை யாவும் கண்டு கழிக்க  இரு கண்கள் போதாது

இதை காணமுடியாது போனாலும் மனக்கண்ணால் நாம் மனதார இறைவனை நினைந்து வழி பட்டு எமது அக இருள் நீங்கி எமக்கு ஞான ஒளி கிட்டும் வண்ணம் வேண்டுவோமாக 

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen