Freitag, 1. November 2013


தீபாவளி திருநாள்
 
 
 
 
 

ஓக்டோபர் மாதம் கடைசி நாளிலும் இன்று இங்கு அதிசயமாக நல்ல வெய்யில் அடிக்கிறது குளிருடன் கூடிய வெய்யில் என்றாலும் வெளிசம் கண்டால்தான் மனதுக்கு ஒரு மகிழ்ச்சி வருகிறது

வர போகிற தீபாவளி திருநாளை ஐரோபாவில் வெய்யிலும் வரவேற்கிறதோ?
தீபாவளி என்றால் எனது சின்ன காலத்து இனிய நினைவுகள் ஓடி வருகின்றது அன்று எல்லாம் தீபாவளி வருகிறது என்றாலே பெரும் மகிழ்ச்சி இரண்டு நாளைக்கு தூக்கமும் வராது  ஊரிலை தீபாவளி வருடம் பிறந்தநாள் என்றால்தானே எமக்கு புதுச்சட்டை வாங்கி தருவார்கள்

இங்கு நாம் தினமும் புதுசு புதுசாக வாங்குகிறோம் ஆனாலும் மனதில் மகிழ்ச்சி என்பதில்லை அன்று எனக்கு தீபாவளிக்கு 3 பேரிடம் இருந்து 3 விதமான புதிய சட்டைகள் கிடைக்கும்  எனது பேரன் கடை கடையாக ஏறி இறங்கி எனக்கு பிடித்த பட்டு துணிகளை வாங்கி தையல் காரரிடம் கொடுத்து எனக்கு பிடித்தமாதிரி அழகான சட்டை தைபித்து கொடுப்பார் நான் முதலே சொல்லி வைப்பன் அவரிடம் என்ன colour  என்ன silk துணியிலை  எனக்கு சட்டை வேணும் என்பது பற்றி அவரும் எனக்கு பிடித்ததை துணியை முதல் வாங்கி காட்டிய பின்னே தைக்க கொடுப்பார்

எனது தந்தை கொழும்பிலிருந்து லீவில் வந்ததும் நான் அவருடன் ரக்ஸ்ஸியில் போய் ரவுணுக் குள்ளே ரெடிமேற் டிரஸ்சும்  எனக்கு பிடித்த மாதிரி Shoe சும்  வாங்கி வந்து விடுவன் அந்த டிரஸ் நான் போட்டாலே அதை போலே வாங்க என்று என் எதிர் வீட்டு வாசுகியும் எனது மாமவின் 2 பிள்ளைகளும் போட்டி போட்டு அதே போலே வாங்கி போடுவார்கள் ஆனாலும் அவர்களுக்கு தங்களை  கண்ணாடியில் பார்த்பின் சந்தோசம் வருவதே இல்லை காரணம் அவர்கள் நிறம் குறைந்தவர்கள்  எனக்கு அழகாக இருக்கும் டிரஸ் அவர்களுக்கு  பொருந்துவதே இல்லை

வாசுகியின் அம்மா மனம் பொறுகாமல் இதை வந்து எங்க வீட்டிலே சொல்லி போடுவா என்டை டிரஸ் போலே ஓடிபோய் வாங்கி போட்டு கண்ணாடி முன்னாலே நின்று வாசுகி அழுவதாக ஏன் என்னை முன் வீட்டு அக்கா போலே வெள்ளையாக அழகாக பெத்து விடவில்லை என்று அவ வீட்டிலை சண்டை போடுவது என்மேல் கொண்ட பொறாமையாலே இதை கேட்கும் போது அன்று எனக்கு பெருமையாக இருந்தது இன்றும் என்னை என் style லை பார்த்து  copy அடிபவர்கள் இங்கும் பலர் உண்டு ஹஹஹஹ

எனது தாயார் மட்டும்  எனக்கு பிடித்ததை ஒரு நாளும் செய்ததில்லை  சங்க கடையிலே வருகிற சீத்தை துணியை வாங்கி முழங்காலுக்கு கீழே இறக்கம் வரும் படி சட்டை தைக்க ஓடர் கொடுப்பா கேட்டால் அது வீட்டுக்கு போடலாம் என்று சொல்லுவா எமக்கு என்று எமது சந்தியில் ஒரு ரெயிலர் ஒழுங்காக தைக்க இருந்தது பெரிய அதிஸ்டமே ஆனாலும் நான் அம்மா தைபித்து தார சட்டைகள் போட்தே இல்லை  கடைசியல் அது அளவில்லாமல் போக  எங்க வீட்டுக்கு வார ஒரு ஏழை குடடும்பத்துக்கு அம்மா அந்த உடுப்புகளை எடுத்து கொடுப்பா 

தீபாவளி அன்று நாம் விடிய குளித்து புது சட்டை போட்டு நல்லுர் கோவிலுக்கும் வீரகாளி அம்மன் கோவிலுக்கும் பேரனோடு போய் வந்தால்தான் காலை உணவு ரெடியாக இருக்கும் காரணம் கோவிலுக்கு போன பிறகு எங்க வீட்டிலே தீபாவளிக்கு நல்ல விருந்து சமையல் அம்மா செய்வா  காலை உணவுக்கு புட்டும் மாசி சம்பலும் முட்டை பொரியலும் கப்பல் வாளைபழமும் சாபிட்ட ஒரு ஞாபகம் இன்னும் என் நாவில் ருசிக்கிறது

கோவிலுக்கு போட்டு வரும் போதே நான் எப்படா வீட்டை போய் ஒரு வெட்டு வெட்டுவன் என்றுதான் நினைத்து கொண்டு வருவன் பிறகு மத்திய உணவுக்கு ஒவ்வொரு தீபாவளிக்கும் எங்களுக்கு ஆட்டு இறைச்சி பங்கு இறைச்சி வரும்

அன்று எங்க வீட்டு இறைச்சி கறியும் சமையலும் எங்க ஒழுங்கை வரை வாசம் அடிக்கும் வீட்டிலையே கரு வேப்பிலை மரமும் இருக்கு கை நிறைய குருத்து கருவேப்பிலையை  அம்மா பிடுங்கி போட்டு இறைச்சி கறி சமைத்தா என்றால் வாசனை மூக்கை சுண்டியிழுக்கும்

அன்று அம்மா கையாலே சாப்பிட்ட அந்த தீபாவளி ஆட்டு இறைச்சி கறி போலே இங்கு ஒரு நாளும் சாப்பிடவில்லை என்னதான் தேடி தேடி வாங்கி சமைதாலும் அந்த சுவையும் வருவதில்லை அந்த மன சந்தோசமும் வருவதில்லை

திபாவளி வருகிறதுக்கு முன்னமே அம்மா முறுக்கு பயித்தம் உருண்டை சீனி அரியம் என மூன்று பலகாரம் வேறே செய்து வைத்திருப்பா  அதை ஒரு கை பார்காமே நான் அங்காலே இங்காலே அசையவே மாட்டன்

எல்லாம் சாப்பிட்டு முடிய பின்னேரம் எங்க மாமா வீட்டுக்கு அடுத்த புதுசட்டையை போட்டு கொண்டு  அம்மாவோடு போய் வருவதும் ஒரு சந்தோசம்தான்

 
பக்கத்து வீட்டு காரரும் பலகாரம் எல்லாம் தருவார்கள் நாங்களும் கொடுப்பம் அன்று அப்படி ஒரு மகிழ்சியை நாம் அனுபவித்தோம் இன்றும் இங்கும் தீபாவளி வருகுது போகுது எல்லாம் ஏனோ தானோ என்று கிடக்குது

ஊரிலை சின்னன்னிலை அம்மா அப்பாவோடு வாழும் போது வந்த தீபாவளி எனி வருமா? அந்த மகிழ்வைதான் கொண்டு வருமா?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen