Mittwoch, 13. März 2013


காதல் என்னும் நோய்

நிலவை தழுவி செல்லும் மேகம் போலே

சில காதல் நெஞ்சை தழுவி செல்வதுண்டு

வானில் கலைந்து போகும் மேகம் போலே

சில காதல் கலைந்து போவதுண்டு

எதிர் எதிராய் மோதும் மேகம் இடிமுழகத்தை

தருவது போலே

சில காதலர்கள் மோதும் போது

இதயம் வெடித்து சிதறுவதுண்டு

காற்றில் அலையும் மேகம் நாலு திசையும்

ஓடுவது போலே

உலகில் இல்லா உண்மை காதலை சிலர்

சாகும்வரை தேடி அலைவதுமுண்டு

தொலை தூரத்தில் தெரியும் தொடு வானம் போலே

சிலர் காதல் தொலை துரத்தே எட்டாமல் போவதுமுண்டு

காதல் என்னும் பொல்லாத நோயாலே

உலகில் வாடும் மனிதர் பலர் உண்டு

காயமே பொய் என்றும் காதலே விதியென்று

உணர்ந்து விட்டால்

துன்பத்துக்கும் ஒரு விடிவுண்டு

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen