Dienstag, 26. März 2013


அன்னை

ஒரு தாயின் அன்பை தனயன் மறந்தால்

தரணி வாழ்வும் தவறியே போகும்

கருவில் சுமக்கும் போதும்

தொப்புள் கொடியால் உயிரை காத்தாள்

மடியில் சுமந்த போதும்

முலையின் அமுதம் தந்தே அணைத்தாள்

கையில் சுமக்கும் போதும்

நிலாவை காட்டி சோறும் ஊட்டினாள்

காலம் உருண்டு போன போதும் உன்னை

மனதில் சுமந்தே கடமைகள் செய்தாள்

இறுதிகாலம் வரையும் உன் நினைவில்

அன்னை மகிழ்ந்தே மடிவாள்

அன்னைதானே பெண்ணின் பெருமை

படைபின் மூலம் அவளே கடவுளின் மறு வடிவம்

கவி மீனா
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen