Sonntag, 18. Juli 2021

 

புத்தர் சொன்ன வாக்குகள்









முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது

இரண்டாவது
உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தன்னலமும் ஆசையும்

மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்

நான்காவது உண்மை மனிதன் தன்னலம் ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு

நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்

(Puthar)

புத்தர் எத்தனை நல்ல விடயங்களை சொல்லியிருக்கிறார் அதை கேட்டு நடப்பவர்கள் யார்தான் உண்டு? நல்ல விடயத்தை கேட்டு கடைபிடிக்க எந்த மதம் ஒரு கட்டுபாடும் விதிக்கலை,

யார் வாயில் நல்லதை கேட்டாலும் நாம் அதை கடைப்பிடிக்கலாம்

அதைவிட எல்லா மதமும் ஒரே நல்ல விடயத்தைதான் சொல்கிறது ஐம்பூதங்களை வைத்து எல்லா மதமும் இயங்குகிறது, எல்லா மதத்திலும் நீர் நெருப்பு காற்று ஆகாயம் பூமி என்பது பொதுவே, எல்லா உயிர்களும் ஐம் பூதங்களின் சேர்க்கையினால் ஆனதே!

இதில் கடவுள் மட்டும் ஒவ்வொருதருக்கும் வேறாக இருக்க முடியுமா?

பகவத் கீதை மூலம் பகவான் கிரிஸ்ணரும் நல்ல விடயங்களை எடுத்துச் சொன்னார் அதையும் யாரும் காதில் விழுத்தவதில்லை, பைபிள் முதல் நமது இந்து மதத்திலுள்ள 4 வேதங்களும் கூட பாவம் செய்வதற்கான தண்டனைகள் பற்றியும், பாவம் செய்யாது எப்படி வாழ வேணும் என்பது பற்றியுமே சொல்கிறது

மற்ற ஜீவராசிகள் பாவம் செய்வதாக தெரியவில்லை, ஆறு அறிவு கொண்ட இந்த மானிடர்தான் பேராசை, கோபம், காமம்,  குரோதம்,  அகங்காரம் என்னும் தீய குணங்களால் பாவங்களை செய்கிறார்கள் அதிலிருந்து தப்ப முடியாமல் மானிட வாழ்வில் மூழ்கி தவிக்கிறார்கள்

 சிலர் மனம் திருந்தி நல்ல வர்களாக நேர்மையான பாதையில் வாழ்நினைத்தாலும் தீயவர்களால் அவர்களுக்கு துன்பம் நேரிடும் போது அவர்களும் நிலை தடுமாறிதான் போகிறார்கள்

முடிந்தவரை பிறர் சொத்துக்கும், மாற்றான் துணைக்கும் ஆசைபடாது பேராசை, அவா கொள்ளாது நமக்கு எது உள்ளதோ அத்துடன் வாழ பழகி கொள்வதே சிறந்த வாழ்க்கை முறையாகும்

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து  என்று ஆன்றோர் சொன்ன வாக்கை கடைப்பிடித்தாலே போதுமானது

இறைவனை மனதில் வை, கடமையை கருத்தாய் செய், துன்பம் தருரோரை விலத்தி வை!

இதுவே என் கருத்தாகும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen