Sonntag, 24. Januar 2016


போலோ வண்டி
 
   
சுவர் கடிகாரத்தின் முள்ளும்
எனது இருதயத்தின் லப் டப்  ஓசையும்
ஒரே வேகத்தில் ஓடுது
அங்கும் டிக் டிக்
இங்கும் லப் டப்
 
நடு நிசியானாலும் சில சமயம்
தூங்காத விழிகள்
மூளைக்கு ஒய்வு இல்லை
அது சிந்தித்தே சிறகடிக்கும்
 
ஏழு வருடமாக எனக்கு
தீராத செலவு வைத்த போலோ வண்டி
புது வருடம் பிறக்க மூன்று நாளைக்கு முன்
மடார் என அடிபட்டு
மண்டையை போட்டு விட்டது
மாரடைப்பில் போகிற மனிதரை போலே
இது தானே லைட் போஸ்டில் முட்டி
தற்கொலை செய்து விட்டது
 
என் நெஞ்சில் அது ஓங்கி
அடித்த வேதனை
மெல்ல மெல்ல குறைய
நானும் யோசிக்குறேன்
 
வண்டிக்கும் ஒரு நாள் விடுதலை
மனிதர்கட்கும் ஒரு நாள் விடுதலை
வரத்தானே வேணும்
 வாங்கிய காலம் தொட்டு
காசாக விழுங்கிய வண்டி
என்னையும் சேர்த்து விழுங்க
அல்லவா பார்திச்சு
 
தப்பினது தம்பிரான் புண்ணியம்
தலை விதி இன்னும்
முடியாததை நினைத்து
நான் சிரிக்கவா அழவா
அதுவும் தெரியவில்லை
பழயன கழிதலும் புதியன புகுதலும்
இயற்க்கையின் விந்தை போலும்
 
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen