Samstag, 9. Januar 2016

தாமரை இலை தண்ணி
வெளியே வானம் இருண்டு உலகமே மங்கி போனது போலே கிடக்கிறது மனமும் என்னமோ  உற்சாகம் இன்றியே  இருக்கிறது
கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் முடிஞ்சு போச்சு இருக்கிற இடத்துக்கு ஏற்றாற்போலே நானும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை 30 வருடமாக கொண்டாட பழகிவிட்டேன் நான் விரும்பாவிடிலும் எனது  ஜேர்மனிய நண்பர்கள்  கிறிஸ்மஸ் பண்டிகையை  கொண்டாடும் மனநிலையை எனக்குள் உருவாக்கி விட்டார்கள்
சும்மா சொல்ல கூடாது எனக்கு பரிசுகள் எல்லாம் தாராளமாக கிடைக்கும் நண்பிகளும்  பிள்ளைகளும் என் அன்பை மதித்து எனக்கு பரிசு தருவது பெரும் மகிழ்ச்சிதான் அது போலே நானும்  என்னை தேடி அன்போடு வந்த நண்பிகளுக்கு சிறிய பரிசுகளானாலும் முழு மனசோடு கொடுக்க முடிந்ததையிட்டு கடவுளுக்கு தான் நன்றி சொன்னேன்
ஆனாலும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகை என்னமோ நிர்பந்தின் அடிபடையில் கொண்டாடபடுவது போலேதான் என் மனதில் ஒரு தாக்கம் என்ன தான் 30 வருடம் வெளிநாட்டில் வெள்ளையருடன் வாழ்ந்து அவர்களது கலாச்சாரம் கொண்டாங்களில் நாமும் தள்ளபட்டு விட்ட போதிலும்  மனதின் அடிதளத்தில் எங்களது தைபொங்கல் புதுவருடம் தீபாவளி என நாம் ஊரில் கொண்டாடிய பெருநாட்களை நினைத்தாலே மனம் ஏங்கி தவிக்கிறது
அதிகாலை  சூரியன் உதிக்கும் முன்னே நாம் எழும்பி அந்த விழாக்களை கொண்டாடி மகிழ நாம் பட்ட அவசரங்கள் எல்லாம் எங்கே?  மனதிலும் உடம்பிலும் ஓடிய உற்சாகம் தான் எங்கே? கையில் கிடைத்த சிறு சில்லறை காசில் கூட நாம் கண்ட  மகிழ்ச்சி எங்கே? கிடைத்த ஒரு புத்தாடையில் பூத்து குலங்கிய அழகுதான் எங்கே?
இன்று பரிசுகள் குவிந்து கிடக்கு  எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஒரு இடத்தில் வைத்து இருக்கிறேன் அதை அனுபவிக்கும் மன நிலை கூட இல்லை  ஒரு நண்பி  நல்ல பட்டு சேலை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து தந்தா இதை கூட வாங்கி பார்த்து நல்லா இருக்கிறது என்று நினைத்தேன் அதை உடுக்க வேணும் என மனம் விரும்பவில்லை ஆனால் அதில் தெரிந்த நண்பியின் அன்பு என்னை பெருமிதம் அடைய வைத்தது
வாழும் காலத்தே நாம் பணம் பொருளை சம்பாதிக்காது போனாலும் ஒரு சிலரது மனதில் ஆவது ஒரு உண்மையான அன்பை காண நேரும் போது அதுவே எமக்கு பெரும் பொக்கிஸமாக தெரிகிறது
வாழ்க் கையின் ஓட்டத்தில்  எங்கள் உடல் மட்டும் அல்ல மனமும் ஆசைகளுக்கும் பொய்யான இன்பத்துக்கும் அடிமைபடாது பட்டும் படாமல் தாமரை இலை தண்ணி போலே இந்த உலகவாழ்கையில் வாழ பழகி கொண்டு விட்டது போலே நான் உணர்கிறேன்
எதுவும் தேடும் போது கிடைபதில்லை கிடைக்கும் போது மனம் நாடுவதில்லை.
கவி மீனா

1 Kommentar:

  1. "...வாழும் காலத்தே நாம் பணம் பொருளை சம்பாதிக்காது போனாலும் ஒரு சிலரது மனதில் ஆவது ஒரு உண்மையான அன்பை காண நேரும் போது அதுவே எமக்கு பெரும் பொக்கிஸமாக தெரிகிறது.."
    உண்மையான வரிகள்.

    AntwortenLöschen