இஞ்சி
இஞ்சி இடுப்பழகா என்று ஒரு கமலகாசன் பாடியது போலே ஒரு அருமையான பாடல் வந்திச்சு
இப்போது இஞ்சி இடுப்பழகி என்று ஒரு படம் வெளியாகியுள்ளது
இஞ்சிக்கு இடுப்பு அழகோ அது எங்கே இருக்கோ எனக்கு தெரியாது ஆனால் இஞ்சியில்லாமல் என் அடுப்படி இருக்காது.
தினமும் இஞ்சி நம் உணவோடு சேர்வது நமது ஆரோக்கியத்துக்கு உகந்தது
இஞ்சியை இடித்து தேனீராகவோ, தேங்காய் மிளகாய் உப்பு புளி கருவேப்பலை வெங்காயம் சேர்த்து துவையலாகவோ அல்லது சிறு துண்டுகளாக வெட்டி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு பால் தேசி புளி கலந்து சலாட் போலவோ
தேனில் கலந்தோ அல்லது அதிகாலை தேனும் தேசி புளி யும் கலந்தோ இப்படி பலவிதமாக இஞ்சியை நாம் உண்ணலாம் குடிக்கலாம்.
இஞ்சி வயிற்றில் ஏற்புடும் அஜீரண கோளாறுகளையும் வயிற்று வலியையும் குணப்படுத்தும்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
இரத்தத்திலுள்ள கொழுப்பை கரைக்கும் பிறஸரை கட்டுப்படுத்தும்
மேலும் தடிமல் பிடித்தால் குடினீராக மற்ற மூலிகைகளுடன் (கொத்த மல்லி மிளகு தூதுவளை இலை திற்பலி ) சேர்த்து அவித்துகுடிக்க தடிமல் சுகமாகும்
இப்படியாக இஞ்சி பல நோய்களுக்கு மருந்தாகுவதால்
இஞ்சியை நம் வீட்டு வைத்தியராக முதல் எண்ணி அவரை எப்போதும் பத்திரமாக வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
இஞ்சி தேனீர் குடித்தும் வயிற்று வலி நிக்காவிடில்தான் வைத்தியரை நாட வேண்டும்.
இஞ்சி சேர்து சமையல் செய்யும் போது இறைச்சி வகைகள் மிருதுவாகுவதுடன் செமிபாடும் அடைய உதவியாக இருக்கிறது
அத்துடன் நல்ல சுவையுட்டியாக இஞ்சி உள்ளது.
இஞ்சி துண்டுகளை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் ஒரு மேசை கரண்டி சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள வாயு தொல்லைகள் நீங்கும்
தேனும் தேசி புளியும் இளம் சுடு நீரில் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும், தொப்பை வற்றும் என்பது நம் மூதாதையர்கள் கூறிய இயற்க்கை மருத்துவமாகும்.
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen