Sonntag, 30. August 2015


ஒரு ஆசை முத்தம் தாராயோ?

பெண் பாவை நீயோ ஒரு அழகின் சிகரமடி

நீ என் சிந்தனையை தொட்டு விட்ட தமிழ் கவிதையடி

நீ மலர்களிலே வாசமுள்ள மல்லிகை மலரடி

என் மனம் கவர்ந்தது உன் மாந்தளிர் மேனியடி

சிரிப்பை சிந்துகின்ற உன் முகமோ வட்ட நிலா தோற்றமடி

 

சுற்றி பறக்கின்ற கூந்தல் அழகோ கரு மேக கூட்டமடி

கண்கள் இரண்டும் எனை இழுக்கும் இரு காந்த சுடர்களடி

அதன் மேல் அழகு தருவது வில் போல் உன் புருவமடி

பிரிகின்ற செவ்விதழோ என்னை பித்தம் பிடிக்க வைக்குதடி

தெரிகின்ற வெண் முத்து பல்வரிசை மோகனமாய் இருக்குதடி

 

உன் மின்னுகின்ற மென் கழுத்தோ மயிலின் சாயலடி

பொங்கி வரும் உன் மார்பழகோ ஒரு மாங்கனி தோட்டமடி

உன் சுட்டு விரல்கள் எல்லாம் என்னை தட்டி வீணை மீட்குதடி

உன் பின்னழகும் முன்னழகும் என்னை முத்தமிட தூண்டுதடி

நீ பேசுகின்ற வாய் மொழிகள் என்னை கிறங்க வைக்குதடி

 

நீ நடக்கும் நடை அழகில் நான் மயங்கி போனனடி

காலம் எல்லாம் கைகோர்த்து சேர்ந்து வர என் மனம்  ஏங்குதடி

மலரை சுற்றும் வண்டாக சித்தமோ தினம் சுழலுதடி

கரையை தொட துடிக்கும் கடல் போலே மனமும் அலை பாயுதடி

ஒரு மூன்று வார்த்தை மொழிவதற்க்கு என் இதழ்கள் தவிக்குதடி

 

உன் கண்ணோடு கண் கலப்பதற்க்காய் விழிகள் தூங்காதிருக்குதடி

காதல் தந்த போதையில் நான் பித்தனாய் போனனடி

என் பயித்தியம் முற்றும் முன்பே நீ வைதியம் பாராயோ?

ஆசையாய் ஓர் முத்தம் அன்பாக தாராயோ?

வேல்

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen