Sonntag, 30. August 2015


பாலை போலே

பால் என்றால் வெண்மை மட்டுமின்றி அதில் தாய்மையின் சிறப்பும் அடங்கியுள்ளது, ஒவ்வொரு உயிரினத்துக்கும் பால் இறைவனால் கொடுத்த கொடை தாய்மை அடையும் போது பால் தானாக சுரக்கின்றது  பிள்ளை மேலே பாசம் பொங்கும் போது பாலும் பொங்கி சுரப்பது இறை அருள்.

 பசுவின் கன்றுக்கு என்றே சுரக்கும் பாலில் பசுவின் பாலை மனிதர்களே பெரிதும் சுவைக்கிறார்கள், அதனால்தான் பசுவை தெய்வம் போலே பாவிக்கிறார்கள் இந்துக்கள், தாயின் பாசத்தோடு மனிதர்களுக்கும் பாலை பொழிந்து கொடுக்கும் பசு அன்பின் வடிவமாக கருதப்படுகிறது.

அன்பின் வடிவான பசு தரும் பாலில் எத்தனை  விதமான சத்துக்களும் தாது பொருட்களும் நிறைந்திருக்கு, மேலும் பால் ஆயுர் வேத மருத்துவத்தில் மிக முக்கியமான  உணவாக கருதப்படுகிறது. பாலில்தான் பல மருந்துகளை கரைத்து குடிக்க சொல்கிறார்கள் மருத்துவர்கள் பாலில் எதை கலந்தாலும் அதனால் ஒரு நோய் குணமாகிறது,


பாலோடு மஞ்சளை கலந்து குடிப்பதால் தொற்று கிரிமிகள் சளி தொல்லை நீங்கும் பாலோடு தேனோ வேறு மருந்தகளோ கலந்து குடிப்பது நாட்டு வைத்தியத்தில் முக்கியம். 


 


பாலை போலே வெள்ளை மனம் கொண்ட மனிதர்களை காணபதும் அரிது  இன்றைய காலகட்டத்தில் பால்போலே கள்ளமில்லா உள்ளம் உடையோரை விரல் விட்டு எண்ணினாலும் கிடைப்பது அரிது.

பாலில் நிறைந்த ஊட்டச்சத்து இருப்பதால்  இந்த பாலை பருகுவோருக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பது போலேதான் நல்ல அறிவு கொண்ட மனிதர்களோடு பழகும் போது எமக்கும் மனத்தைரியமும் வாழ்கையில் முன்னேற்றமும் கிடைக்க கூடியதாக அமையும்.

 

பால் கோப்பியில் கலந்தால் பால் கோப்பி

பால் தேசி புளியில் கலந்தால் பன்னீர்

பால் புழித்தால் தயிர் ஆகிறது

அதையும் பிரித்தால் மோர் ஆகிறது

மேலும் வெண்ணெய் என்றும் நெய் என்றும்

சீஸ் என்றும் பட்டர் என்றும்

பால் பவுடர் என்றும் சுவை வேறாகியும்

பாலின் தன்மை மாறாது இருப்பது போலே

நாம் எங்கு போனாலும் யாரோடு பழகினாலும்

எமது குணம் தரம் மாறாது இருப்பதே மேல்

 

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen