Sonntag, 8. Februar 2015


 பக்தர்களே

பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் மகாவிஸ்னு தான் கடவுள் என்றார்கள், மும் மூர்த்திகளில் ஒருவர் என்றும் முத்தொழிலில் அழித்தல் தொழிலை பார்பவர் என்றும், அவருக்கு திருமால் கோயில்கள் கட்டி வழிபாடு செய்து வந்தார்கள். பின்னர் அவரின் அவதாரம் என்று சொல்லி கோகுலத்தில் லீலைகள் புரிந்த கண்ணனையும் வழிபட்டார்கள், அதன்பிறகு அவதார புருசன் என்று சிறீ ராமனையும் பக்த்தியோடு வழிபட்டார்கள்,  இத்தோடு விட்டார்களா நமது பக்த கோடிகள்?

ராமபிரானின் அன்புக்கு பாத்திரமானவரும்,  சீதாபிராட்டியை கண்டு பிடிக்க உதவியருமான அனுமானைக் கூட வழிபட்டார்கள்.அவரும் கடவுளின் அவதாரம் என்றார்கள், சரி போனால் போகட்டும் அனுமானின் வால் போல் பக்தர்களும் இந்தியாவில் தொட்டு இலங்கை வரை நீண்டே போனார்கள். சரி வால் நீண்டாலும் அனுமான் போல் வாயாவது மூடி நிற்க்கும் ப க்தர்களுக்கு என்று பேசாமலே நாமும் இருக்கின்றோம், கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொன் மக்கள் , எனி என்ன எலியை கும்பிட போகிறார்களா? என யோசிக்கையில்.

கடவுள் பேரை சொல்லி ஏமாற்றி பிழைக்கும் மனிதர்களை கூட சில சிந்திக்க தெரியா மனிதர்கள் கடவுள் என்றே நம்புவதுதான் ஆச்சரியம், கையில் வெண்ணெய் இருக்க நாம் நெய்க்கு அலைவது போலே கடவுள் எம்முடனே இருக்கும் போது அவனை தேடி நாம் போலி மனிதர்களை எல்லாம் நம்பி ஏமாறுவது சரியா? சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திப்பார்கள் இல்லை நாம் சொந்த புத்தியின்றி மக்கிதான் போவோம் என அடம் பிடிப்பவர்களை நாம் சொல்லியும் திருத்த முடியாது.

சாயிபாபா தொட்டு பாபா நித்தியானந்தா வரையில் கள்ள சாமியார்கள் என்பதை நிருபணம் செய்த பின்பும் இன்னும் அவர்களை நம்புவோர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள்.

உண்மையாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை நம்ப மாட்டார்கள்  அனுமான்,  பாம்பு போன்றவற்றையும் வணங்க மாட்டார்கள், முன்பு ஒரு காலத்தில் ஆஞ்சனேயர் பக்தர்கள் காதலிப்பதில்லை திருமணமும் செய்வதில்லை செய்தால் ஆஞ்சனேயர் கோவிப்பார் என்று சொல்லி வந்தார்கள், அப்படி தான் இதுவரை கதைத்து வந்த பக்த கோடிகள் இப்போ என்ன செய்கிறார்கள் தெரியுமா? அது தான் இன்றைய புதிய திருப்பம் ஆஞ்சனேயர் பக்தர்கள் இன்று ஐரோப்பாவில் ஒரு கோயிலும் வைத்து அதற்குள் ஒரு கல்யாண மண்டபமும் வைத்து  திருமணமும் செய்தல்லவா வைக்கிறார்கள்.

வருமானம் வருகுது என்பதற்க்காக எப்படி தங்கள் வசதிக்கு ஏற்றபடி கோயில்களும் மாறுது கோயில் முறைகளும் மாறுது பக்தர்களும் மாறுகிறார்கள் பூசாரிகளும் மாறுகிறார்கள் இது தான் எனது கவலை. தமது வசதிக்கு தக்கபடி விதி முறைகளை மாற்றி அமைக்க வல்லவன் தான் தமிழன் ஆனாலும்  மற்றவர்களை ஏமாற்றுகிற மாதிரி ஒரு நாளும் கோயில்களை ஒரு வருமானம் தரும் யுக்த்தியாக மாற்றக் கூடாது.

ஏன் கல்யாண மண்டபத்தை தனியாக வைத்து அவர்கள் தமது பிளைப்பை நடாத்தக் கூடாதா? சாமி என்ற பெயரில் பக்தி என்ற  பெயரில் மக்களை ஏமாற்றி பூசை புனஸ்காரம் என பணங்களை  வாங்கி  ஒரு நாளும் மற்றவர்கள் காதில் பூ வைக்காதீர்கள் இதை நான் சொல்லி என்ன பிரயோசனம்?

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றி பிழைப்பவர்கள் கூடும் போது நமக்கென்ன வேலை என விலகி போவது தான் முறையா?தயவு செய்து ஆஞ்சனேயர் பக்தர்களே உங்கள் பதில்தான் என்ன?  ஆஞ்சனேயரும் தெய்வமா? அவர் பக்தர்கள் திருமணம் செய்வார்களா? உண்மை தெரியவில்லை கொஞ்சம் பதில் தான் சொல்வீர்களா?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen