Sonntag, 25. Mai 2014


மனோரஞ்சித பூ
 

மனோரஞ்சித பூ செடி என்று ஒரு பூ செடி ஊரிலை எங்க வீட்டிலை  முற்றத்திலே அழகாக செழித்து வளர்ந்து பூத்துகொண்டே இருந்தது.

அந்த பூ பச்சை நிறமாகதான்பூத்திருக்கும், இலைகளோடு  இலைபோலே பூ தெரியாமல் இருக்கும், ஆனால் அதன் வாசத்தில் பூ  பூத்திருக்கு எண்டு நான் தேடி கண்டு பிடித்துவிடுவேன்.

அந்த பூவை நாம் மணக்கும் போது மனதில் எதை நினைக்கிறோமோ அந்த வாசனையை அந்த பூ தரும் என்பதால்தான் அதை மனோரஞ்சித மலர் என்று சொல்வார்கள், அதனை செண்பகமலர் என்றும் கூறுவார்கள்.

இது ஒரு கொடிபோலேதான் ஆனால்  தண்டுகள் நல்ல வைரமானது செடி போலே நிக்கும், இலைகள் மாவிலையை ஒத்த வடிவம் உடையது,  இந்த மலர் மலர்ந்து ஒரு கிழமை வரை வாடாமலும் வாசம்  குறையாமலும் இருக்கும், நாள்பட நாள்பட அந்த பூ மஞ்சள் நிறமாகிவிடும், பின்னர் பழம் கூட இதிலே காய்கும் அதை வொளவால்கள் பறித்து கொண்டு போவதாக சொல்வார்கள் காரணம் பழம்கூட வாசமாகதான் இருக்கும், என் மனதை தொட்ட லர்களில் இந்த மனோரஞ்சித மலரும் ஒன்றாகும்.

இந்த மலரை போலவே தோற்றத்தில் ஒற்றுமை இருபது போலே ஆனால் கொஞ்சம் சிறிய இதழ்களை உடைய ஒரு வாசம்வீசும் மலர் செடியை நான் ஜேர்மனியிலும் கண்டு வியப்புற்றேன்.

மலரின் தோற்றம் சிறியதாகவும் செந்நிறமாகவும் செடிகளில் இலைகளும் சிறியனவாக இருக்கின்றன, ஆனால் வாசம் அந்த செண்பகமலர் போலவே இருகின்றது.

நாட்டுக்கு நாடு மனிதர்களும் நிறமும் தோற்றமும் மாறுவது போலே, செடிகளும் மலர்களும் கூட மாறி இருப்பதைதான் நான் அறிகிறேன், இறைவன் படைப்பில் இயற்க்கையிலும்எத்தனை விந்தைகள்.

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen