நாட்டு நடப்பு 9
மீண்டும் நாட்டு நடப்பு பற்றி எழுதுகிறேன் நித்தம் நித்தம்
மாறுவது எத்தனையோ அதில் மனித்ர் குணங்களும் மனங்களும் மாறுவது போலே வாழ்க்கையும்
மாறுகிறது கலாச்சாரமும் மாறுகிறது
ஊரிலை இருக்கும் வரை கிழிந்து போன ஆடைகளை போட்டால்
பிச்சைகாரன் என்றுதான் சொல்வார்கள், அங்கை கிழிந்த ஆடைகளை போடுவதில்லை பிய்ந்து
போனால் தைத்து அல்லது புது ஆடைகளை வாங்கி போட்டல்தான் கொளரவம் வெளிநாடு வந்த பின்
கிழிந்த ஆடைகளை போட்டால்தான் நாகரீகம் ஆகி போச்சு!
இளசுகள் போடுகிற கால்சட்டை முழங்காலிலை ஓட்டை இல்லாட் டி
பின்னாடி ஓட்டை இப்படி போட்டால்தான் ஸரைலு பாருங்க!
அந்த நாளையிலை கார் மேக கூந்தல் என்பார் கரு நாகம் போலே
பின்னல் என்பர் நீண்ட தலை முடி இருந்தால்தான் பெண்களுக்கு பின்னல் போடவும் பூமாலை
கட்டவும் ஐடை பின்னி அலங்காரம் பண்ணவும் அழகு என்று சொல்வர் ஆனால் வயது போய்
முடியை கழுவி சுத்தமாக வைக்க முடியாதவர்கள் முடியை கட்டையாக வெட்டுவது ஒரு காரணம்
என்றால் இளசுகள் எல்லாம் சைட்டு எல்லாம்
வழிச்சு நடுவிலை மட்டும் மயிரை விட்டு வெட்டுவது நாகரீகமாச்சு பெண்களுக்கு பதிலாக
ஆண்பிள்ளைகள் இன்று முடி வளர்து திரிவதும்
நாகரீகமாச்சு பாருங்க!
ஆடை அலங்காரம் மாறுவது மட்டுமல்ல ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழ்ந்த காலம் மலை ஏறி போச்சுது இன்று ஒன்று போக மற்றொன்னு பிடி என்று காலம் மாறி
போச்சுது தாங்க முடியாத தொல்லைகளினால் குடும்பங்கள் பிரிவது உண்டு
இல்லை மரணம் சம்பவித்தால் ஒருவர் தனித்து வாழ்வதும் உண்டு ஆனால் காசுக்காகவும்
செக்ஸ்க்காவும் ஆணும் பெண்ணும் பிரிந்து
புதிய துணையை தேடுவது இன்று சகஐமாகி போச்சுது!
அதையேன் கேட்பான் ஒரு
எண்பது வயது கிழவன் கூட இங்கை தனியாக இருக்க முடியாது அதுவும் பென்ஸன்
பணமும் வேறு வருமானமும் சிற்றிஸனும் இருந்து விட்டால் அந்த கிழவனை சுற்றியும் பெண்டுகள்
வட்டமிடுகுதுகள் காரணம் அந்த ஆளை பிடித்து எழுதினாலும் அந்த ஆளு அடுத்த நாளே
மண்டையை போட்டாலும் இல்லை போட வைத்தாலும் காலத்துக்கும் பென்ஸன் பணமும் சிற்றிஸனும் எழுத்து எழுதிய பெண்ணுக்கு
கிடைக்கும் என்பதுதானனுங்க!
இதற்காக பென்ஸன்
கிடைக்காத சிற்றிஸன் இல்லாத பெண்கள் கிழவனை கூட பிளான் பண்ணி பிடிக்க
அலைகுதுகள் இதுவும் உண்மைதானுங்க!
காசேதான் கடவுளப்பா இந்த காசுக்காக எது வேணுமாகிலும் செய்ய
துணிந்த மனிதாகள்தான் நம்மை சுற்றி
உண்மையான நட்பும் இல்லை உண்மையான பாசமுள்ள உறவுகளும் இல்லை
அப்படியான ஒரு உலகத்திலைதான் நாம் வாழுகின்றோம்
ஊரிலை இருக்கிற காணி பூமி சொத்து சண்டையிலே சகோதரங்கள்
எல்லாம் அடிபடடு பிரிந்து போகிறது, யாரையும் யாரும்
நம்புவதில்லை யாராச்சும் நல்லாய் இருந்தால் மற்ற சகோதரங்களுக்கே மனசு பொறுப்பதில்லை
சின்னதிரையிலை காட்டுகிற சண்டைகளை பார்த்து சனம்
திருந்துவதில்லை அதே போலே வில்லிகளும் வில்லன்களும் நம்ம சனத்துக்கிடையே பெருகி
கொண்டே போகிறது
ஜேர்மன்காரன் நாயை வளர்கிறான் ஆனால் இங்கு வந்ததமிழரில்
பலர் தெருநாய்போலே நாக்கு இழைக்க அலைகிறார்கள் அடுத்தவனுக்கு பெருமை காட்ட வீட்டை
வாங்குறான் காரை வாங்குறான் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக வைக்குறான் ஆனால் வருமானம்
போததாது வாங்கின வீட்டுக்கு காசு கட்டவும் இந்த ஆடம்பர வாழ்க்ககைக்கும் பணம் தேவை
என்பதால் ஒரு வேலை பதிந்து செய்தால் அடுத்த வேலைகளை களவாக செய்ய நாள் பூரா ஓட்டம்
நாக்கு தள்ளும் அளவுக்கு வேலை செய்ய வேணும் குளிக்க நேரமில்லை ஆற அமர உணவு உண்ண
கூட நேரமில்லை தூங்கவும் நின்மதியில்லை
இது எல்லாம் தேவையா? வரவுக்கு
தக்கபடிதான் வாழ்க்கையை அமைக்க வேணும் நிலமைக்கு மேலே
நினைப்பு வந்தால் நின்மதி இருக்காது என்று சும்மாவா அன்று பாடினார்கள்?
நீங்களும் சுற்றி பாருங்க நான் சொல்வது பொய் இல்லை என்பது
புரியும் எப்படிதான் ஓடி ஓடி சேர்த்தாலும் கடைசியிலே காதற்ற ஊசியும் வராது காண்
கடைவளிக்கே என்று பட்டினத்தார் பாடி வைத்தார் அன்று
நாம யாருக்கும்
எதுவும் சொல்ல முடியாது பாருங்க தாம்
வாழவேணும் எப்படியும் வாழ வேணும் என்று முறை கெட்டு வாழ்வோருக்கு சொன்னால்
இவவுக்கு எரிச்சல் அதுதான் இப்படி சொல்லுறா என்கிற சனம்தான் உண்டு அனுபவ பட்டவன்
சொன்னாலும் கேட்க மாட்டார்கள் முன்னோர்கள் சொன்னதையும் கேட்க மாட்டார்கள்
என்றோ ஒருநாள் எல்லாம் தானாக புரிய வரும் போதுதான் தெரியும்
எது நமக்கு நிலையானது என்று!
ஊரை கூட்டி உறவுகளை கூட்டி முறையாக தாலி கட்டிய மனைவியை
மதிக்காதவனுக்கு கடைசியிலை ஒரு வாய்க்கு ருசியாக கஞ்சிக்கும் வளி ல்லை நேரான
வழியிலை வாழாதவனுக்கு வாழ்க்கையிலே நின்மதியில்லை இதுதாங்க உண்மை!
மேலும் சொல்கிறேன் அடுத்த முறை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen