Samstag, 3. August 2024

நீ நான் என்று

எத்தனை துன்பங்களை கடந்து வந்தேன்

இன்று கடக்க முடியாமல் நின்று விட்டேன்

சோதனைகள்  யாவையும் தூசியை தட்டுவது போலே

தட்டி விட்டேன்

இன்று றொட்டி   தட்ட முடியாமல்  தவிக்கின்றேன்

எனக்கு என்று ஒரு தனி பேர் உண்டு

அதனால் தனிமையும்  கூட வந்தாச்சு

 

நீ நான் என்று என்ணி விட்டால் அங்கு வாழ்க்கை என்பது இல்லை

நாம் என்று சேர்ந்து பாடு பட்டால் வாழ்க்கை வளர்வது உண்மை

யாரோ எழுதினான் யாரோ மீயுசிக் போட்டான் யாரோ  பாடினான்  

இங்கு பாட்டு ஒன்று உருவாச்சு

ஒற்றுமையாய்  பாடு பட்டால் அங்கு படமும் நல்லா வெளியாச்சு

 

வந்து போன உறவுகள் எல்லாம் வாழ்கை

பாடத்தை சொல்லியாச்சு

நடந்து போன சம்பவங்கள் யாவும் படிக்கலலாய மாறியாச்சு

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல  என் கதை வேறு பாரதமாச்சு

 

இரவு முழுதும் கொசு அடிச்சே முழித்திருப்பவரும் உண்டு

இங்கு பட்டு மெத்தை விரித்திருந்தும் நடந்ததை நினைத்து

 தூங்காதவரும் உண்டு

பாதைகள் பிரிந்து போனாலும் உறவுகள் பறந்து போனாலும்

நினைவுள் எம்மை விட்டு போவதில்லை

நடப்பதை தடுக்க முடிவதில்லை காலம்தான் பதில் சொல்லும்

என்று காததிருப்போம் காலன் வரவை பாத்திருப்போம்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen