(மனிதன் மட்டும்)
எறும்பு ஓடி ஓடி பாடு பட்டு
ஒற்றுமையாய் வாழுது
குழவி கூட கூடு கட்ட
இடம் பார்க்குது
தேடி செல்லுது
கிளிகள் கூட கொஞ்சி குலவி
சோறு போட்டால் நாய்கள் கூட
வால் ஆட்டுது
மனிதன் மட்டும் நன்றி கெட்டு திண்ட
வீட்டுக்கே இரண்டகம் பண்ணுறான்
மனிதன் மட்டும் வீடு இருந்தும்
அடுத்த வீட்டை பார்க்கிறான்
தன் வீட்டு கஞ்சலை பொறுக்காமலே
அடுத்த வீட்டு குப்பை பற்றி
கதை பேசுறான்
இவன் வாலில்லா குரங்கு என்று
தன்னை நிலை நாட்டுறான்
ஆசையிலே தாவி தாவி
திரிவதனால் இதை
இவன் நிலை நாட்டுறான்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen