Samstag, 9. April 2022

 

பரதேசி

பழத்தை தேடி பறவைகள்

மரம் விட்டு மரம் பறக்குது

இரையை தேடி விலங்குகள்

யாவும் பாய்ந்து திரியுது

இன்று சோற்றை தேடி மனிதனும்

அலைந்து அலைந்து பரதேசியாகி விட்டான்

பணம் இருந்தாலும் புசிக்க

உணவு இல்லாட்டி

பணத்தை சாப்பிட முடியாது

 


தங்கம் விலை ஏறிட்டு என

தலையில் கை வைப்போர் ஒரு புறம்

எண்ணெய் இல்லாமல்

பொரியல் இல்லாமல்

புலம்புவோர் மறு புறம்

காலிருந்தும் நடக்க மறந்த

பலருக்கு இன்று

பெற்றோல் இல்லாமல் அந்தரம்

 

கொரோனா படுத்துது ஒரு புறம்

பஞ்சம் பசி பட்டினி வருகுது மறுபுறம்

இரண்டு பேரு சண்டையிலே

பார்தவர் மண்டை உடைவது போலே

இரண்டு நாடுகள் போடுற  யுத்தத்திலே

உலகமெங்கும் கூச்சலும் கூப்பாடும்

உலகம் போற போக்கை பாரு

எங்கு பார்த்தாலும் அவலம்

அவணிக்கு ஏன் வந்தது இந்த கோலம்

ஏன் வந்தது இந்த கோலம்?

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen