Sonntag, 20. März 2022

 

இது ஊரறிந்த உண்மை 

பாதி மலர்ந்து மொட்டு

விரியும் பருவம்

பால் வடியும் வதனமும்

 பாவை என் புன் சிரிப்பும்

பார்பவர் மனதை கவர்ந்ததற்கு

கன்னி நான் பொறுப்பில்லை



அலங்கார பொருளுமில்லை

இரட்டை சடைதனிலே

மல்லிகை பூவுமில்லை



 

ஆனாலும் பட்டு பாவாடை

தாவணி உடுத்தி

பொட்டு வைத்து

 கோயில் போகையிலே

பின்னாலே பாடுவோரும்

கண்ணடித்து சைட்

அடிப்போருமாய் சிலரு

அயலுக்குள்ளே வாலிபர்கள்

வட்டமடித்து செல்கையிலே

சிரிப்புதான் வரும் எனக்கு

அது சிந்தனையை தொடவில்லை

நீ சொன்ன ஒரு வார்த்தை மட்டும்

என் நெஞ்சில் நெருப்பாய் சுட்டதென்ன

 

விதியின் விளையாட்டில்

காமன் எய்திய அம்பு

என் நெஞ்சை தைத்ததென்ன

காதல் பாட்டும் காதில்

கான மழை பொழிந்ததென்ன

காவியத்து காதல் போலே

மனம் உருகி போனதென்ன

மண்ணுக்கும் பொன்னுக்கும்

ஆசை படாத பெண்ணு இவள்

கண்ணுக்குள் காதலை

மட்டும் வளர்ததென்ன

 

சொல்ல முடியாது மனம் துடிக்க

எல்லையில்லாமல் துயர் நீடிக்க

காலங்கள் போனது காத்திருப்போடே

கைகூடி வந்தபின்னே பெண்மை

களியாட்டம் போட எண்ண

அத்தனையும் பொய் என்று

காட்டிவிட்டான் அவன் இன்று

 

மண்ணுக்கு ஆசைபட்டு

மணமுடித்த மானிடனே

பொய்யாலே பூமுடித்து

மணவாழ்வை சுடுகாடாய்

மாற்றிய கோலமே!

நித்தம் நித்தம் போராட்டம்

வேணாம் இந்த  பந்தம்

தாலி என்ன வேலி என்ன

தள்ளுங்கடா என்னை விட்டு

என்று போனதுதான் உண்மை

இது ஊரறிந்த உண்மை!

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen