Sonntag, 20. März 2022

 

சித்ததில் வந்த சில சிந்தனைகள்

இத்தாலி காரனும் நூடில்ஸ் செய்கிறான் ஜேர்மன் காரனும் நூடில்ஸ் செய்கிறான் ஆனால் சீனா காரனுடைய மீ நூடில்ஸ் தாங்க சுவையாக இருக்குது

 இந்த மீ நூடில்ஸ் சாப்பிட்ட போது வந்த சிந்தனை தாங்க இது!

அமெரிக்கா காரன் அணுகுண்டு போடுறான் றஸ்சியா காரனும் அணுகுண்டு போடுறான் ஆனால் சினா காரன் போட்ட கொரோனா குண்டு  சத்தமிலாமல் கண்ணுக்கு தெரியாமல் குட்டி போட்டு குட்டி போட்டு தாக்குது


பாரத போரிலே அர்சுணன் விட்ட அம்பு பத்தா பெருகி போய் எதிரிகளை தாக்கினதாக கதையுண்டு அப்படிதான் கொரோனாவும் பத்தாக பெருகி பல திசையும் தாக்குது

பாம்பை கண்டால் படையும் நடங்கும் என்பர் இந்தியா காரன் பாம்புக்கு பாலை ஊத்தி ஊத்தி அதை மயங்கி படுக்க வைக்கிறான், ஈழத்தமிழனோ பாம்பை கண்டால் அலறி அடிச்சு ஓடுறான் சீனா காரன் பாம்பை படக்கென்று பிடிச்சு டக் என்று வெட்டி சட்டியிலே போட்டு வறுத்து சோஸ் விட்டு சாப்பிடுறான்

சீனபட்டு சீனா வெடி சீனத்து தெயிலைகள் என்றும் இன்னும்  சீனாவிலிருந்த பல மின் சார உபகரணங்களும் உலகமெங்கும் விற்பனையாகியது,  விலை மலிவு என்று வாங்கி போட்டு கெதியா உடைது  ( Made in China ) என்று நக்கல் நையாண்டி கூறி சீனாவை ஏளனம் செய்வோருமாகதான் சனம் இருந்தது,  இன்று சீனா கொடுத்த கொரோனா ஓட ஓட துரத்துது முடிவில்லாமல் பெருகுது இதுக்கு என்ன சொல்ல போரிங்கோ?

இந்தியா காரன் சாதம் என்று தோசை இட்லி என்றும் திண்டு திண்டு சோம்பி கிடக்கிறான் இலங்கை தமிழனோ சோத்தை திண்டு திண்டு வயிற்றை நிரப்பி வண்டியை வளர்கிறான்  மேலை நாட்டவர்களோ பன்றி மாடு என்று பொரிச்சு திண்டு கொழுப்பு கூடி திக்கு முக்காடுறான் ஆனால் சீனா காரன் மட்டும் எப்பவும் ஒல்லியாக சுரு சுருப்பாக எறும்பை போல ஒய்வின்றி ஓடி ஓடி உழைக்கிறான்

யுத்தமில்லாமலேல நாடுகளுக்குள்ளே உள்ளிடுகிறான் இது எப்படியுங்க?

வல்லரசு எந்த நாடு என்று உலக நாடுகளுக்குள்ளே போராட்டம்,  வலிமையான செயல்பாடு சீனா காரனிட்டதானே இருக்குது சிந்திச்சு பாருங்க உங்ககளுக்கே புரியும்

இது மட்டுமா கைலாயமும் அதிலை வாழுகின்ற சிவபெருமானும் கூட சினா காரன்டை எல்லையிலைதான் இருக்குது என்றால் இந்து மதத்தில் சொல்ல படுகிற நம்ம கடவுள் கூட தமிழனுக்கு பக்கத்திலை இல்லை பாருங்க!

நல்ல காலம் சீனா காரன் இன்னும் சிவபெருமானிண்டை கழுதிலை இருக்கிற கார்கோடனை காணவில்லை!

போதி தர்மன்  என்ற அரசனும் தனது திறமையை இந்தியாவிலை காட்வில்லை சினாவுக்கு குடி பெயர்ந்து போய் அங்குதான் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார் காரணம்தான் என்ன? சீனர்கள் மேல்தான் அவருக்கு அன்று நம்பிக்கை வந்தது

இந்த வித்தையை கற்க உடல் வலிமை மட்டுமல்லாது மன வலிமையும் வேண்டும் என்பதே முக்கிய காரணம்

ஐம்புலன்களையும் அடக்கி இந்த கலையை கற்க சீனர்கள் முன் வந்தார்கள் என்பதே உண்மை!

இந்தியனுக்கு காதலும் கலையும்  சங்கீத ஞானமும்  நடனமும் நடிப்பும் எப்படி  கை வந்த கலையோ அது போலே சீனருக்கு கராட்டி குங்ஃபூ என்பது  உடலுக்கும் மனசுக்கும் உள்ள வலிமை என்பேன்,

சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார்.

( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு )

வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )

இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது.

எதையும் சாதிக்ககூடிய மனோ வலிமை சினா காரனிடம் இருக்கு என்பது மறுக்க முடியா உண்மையுங்க!

எனிமேலாச்சும் சீனா காரனை நக்கல் நையாண்டி பண்ணாதீங்கோ, அமெரிக்காவில் எடுத்த ஒரு ஆங்கில படம் பார்த்தனான் பெயர் ஞாபக்துக்கு வருகுது  இல்லை அதிலை உலக நாடு எல்லாம் அழிந்து போனாலும் சீனா மட்டும் அழியாமல் இருப்பதாகதான் காட்டுறாங்க, எப்பவும் நான் நான் என்பவனும், எங்கடை இனம், எங்கடை  மதம் என்று திமிர் பிடித்து அலைபவருக்குமாகதான் நான் இதை எழுதுகிறேன்

எங்கடை கையிலை எதுவுமில்லை  எல்லாம் அவன் செயல்

சிந்திச்சு பார்த்தால் உண்மைகள் புரியும் உண்மைகள் புரிந்தாலும் அதை ஒப்பு காள்ள மனமில்லாதவர்கள் உலகிலே அதிகம் பேரு இதுதாங்க நான் சொல்ல வந்த உண்மை!

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen