Samstag, 6. Februar 2021

 

தனிமையிலே

காலை வடை மதியம் முட்டை குழம்பு சாதம்

இரவு பற்றிஸ் என்று நளபாக சமையலோடு

வாழ்க்கை இன்று போகுது

24 மணித்தியாலம் ஓடி ஓடி உழைத்தாலும்

கோடி பணத்தை சோர்த்தாலும்

இந்த ஒரு சாண் வயிற்றோடுதானே


மனம் நிறைந்து போகுது



நாம் வாங்கி வந்த வரம்தானே

மாங்கல்யம் தந்துனா ஆனது

அது தீந்தனா தீந்தனா பாடியே

திசை மாறி போனது

மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு

ஒரு  மாடு குறுக்காலே போனது

அன்பு இல்லா வாழ்க்கையிலே அச்சாணி

உடைந்து வாழ்க்கை வண்டியும் தடம் புரண்டது

 

வந்த பாதை தெரியாமல் போனது

போன வாழ்க்கையும் இளமையும்

திரும்பாது என்றது

கூடு விட்டு கூடு பாயும் வித்தையும்

தெரியாமலே உடைந்து போன கூண்டுக்குள்ளே

கிளி நின்றுசோக பாடல் பாடுது

சொந்தங்கள் ஏதுமின்றி

 தொல்லைகளும் இல்லாமலே

தனிமையிலே இனிமைதானே காணுது

 

 

வந்த வேலை முடிந்து விட்டால்

ஒபிஸ்சும் மூடுது

கர்ம வினை தீர்ந்து விட்டால்

கடமைகளும் முடித்து விட்டால்

நீயும் நடையைதானே கட்டணும்

யாரை நம்பி நீ பிறந்தாய்

போகும் போது கூட வர

 

நீ வந்த பாதை வேறு

போக போற பாதையும் வேறு

சுற்றம் வேண்டாம் சொத்து வேணாம்

சுற்றி நாலு பேரும் வேணாம்

செத்த பின்னே எரிபதற்கு

மின்சாரம் போதுமே

இந்த மின்சாரம் போதுமே!

கவி மீனா

 

 

 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen