Freitag, 8. Januar 2021

 

ஆண்டவன் தீர்ப்பு 

சுற்றி வர மாடி கட்டி

மாடி மேலே மாடி கட்டி

மரங்களையும் வெட்டி முறித்து

சூரிய சந்திரனையும் மூடி  மறைத்து


நாகரீக நாடாக மேலை நாடு இங்கே

அதில் கூண்டுக்குள்ளே கோழி போலே

நம்ம வாழ்க்கை ஓடுது

 

காணி வளவு தோட்டம்

துரவென்று வாழ்ந்த சனம்

இங்கு ஓடி வந்து அடைபட்டு

மனம் நொந்து வெந்து சாகுது

குருவி கூட கும்மாளமாய்

அங்கும் இங்கும் பறக்குது

நம்ம சனம் தேடி வந்த வாழ்க்கை

இங்கே தடம் புரண்டு ஆடுது

 

காடு கரம்பு சுற்றி திரிந்த

மனிதர் கூட

காடுமின்றி மலையுமின்றி

இயந்திரமாய் வாழுது

கொட்டும் அருவியில் குழித்து

வாழ்ந்த சனங்கள் கூட

இங்கே வீட்டுக்குள்ளே

மல சலம் கழிக்குது

 

பேராசை பெரும் தரித்திரமாய்

போனதுதான் மீதியா?

போதாக் குறைக்கு கொரோனா வந்து

வாயை மூக்கை பொத்த சொன்னதா?

 

பாவம் செய்த மனிதரெல்லாம்

சாகாமல் நிக்கையில்

சும்ம போரவன் வந்தவனை எல்லாம்

கொரோனா பிடித்து கொல்லுதா?

ஆண்டவன் தீர்ப்பு இதுதான் என்றால்

ஆடும் மனிதன் என்ன செய்வான்

இந்த பூமி என்னும் மேடையிலே

ஆடும் மனிதன் என்ன செய்வான் ?

Keine Kommentare:

Kommentar veröffentlichen