Samstag, 6. Februar 2021

 

சின்னதிரை 


தமிழ் ரிவியில் புது புது சின்னதிரை தொடங்கும்

பழய தொடர்கள் கதை முடியாமலே காணாமல் போகும்.

ஒரு கதையை முடிக்க திராணி இல்லை சனங்களை பேய்காட்டி சும்மா குடும்ப சண்டைகளை

கருவாக்கி, இன்னும் நல்லாக இருக்கிற சனங்களை கெடுக்கவும், வீட்டுக்கு வீடு வில்லன்களையும்,வில்லிகளையும் உருவாக்கவே இப்படி தொலை காட்சியும் சின்ன திரை தொடர்களும் போகின்றது. அதிலும் பெண்களை பக்கா வில்லிகளாக சித்தரித்து பெண் இனத்தையே கேவல படுத்துவதுதான் சின்ன திரை!

எல்லாரும் ஒரே வீட்டிலிருந்து அடிபடுறதுதான் சின்ன திரை கதைகள்.

 ஏன்தான் இப்படி கதை எழுதுறாங்களோ தெரியவில்லை

காசு உழைக்க தொலை காட்சி முதல் நடிகர்கள், நடிகைகள், படப்பிடிப்பாளர்கள் வரை பாடு படுகிறார்கள்.

காசை கொடுத்து அழுது அழுது இந்த தொடர்கதைகளை பார்த்து மற்றவர்கள் நோயை தேடுகிறார்கள்.😀

கற்பது என்னமோ வில்லதனம்தான்!

நானறிய பல வில்லிகள் நம்ம இடத்தில் உருவாகி விட்டார்கள்

ஒரு வீட்டிலை பிள்ளைகளை படிபித்து ஆழாக்கி வேலை கிடைக்கும் வரை வளர்பதுதான் பெற்றவர்களது கடமை, சரி அதுக்கும் மேலே கல்யாணமும் செய்து வைத்து வழி அனுப்ப வேண்டியதுதானே?

 எதற்காக கட்டினவர்கள், கட்டாதவர்கள், வேலை உள்ளவர்கள், இல்லாதவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் குடியிருந்து குத்துப்படவேணும்?  இதுதான் என் கேள்வி கேட்டால் கூட்டுக் குடும்பம் என்கிறார்கள்

அப்ப கூட்டு குடும்பம் என்றால் ஒற்றுமையாக இருக்க வேணும் இல்லாது போனால் தனி குடித்தனம் போவதே சிறப்பு!

மேலை நாடுகள் போலே வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு அரசாங்க பண உதவி கிடைக்காது என்பது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உண்மைதான், ஆனால் அதற்காக பிள்ளைகளிடம் அடாவடியாக காசை பறிபதும் தங்களை பார்க்க சொல்லி வற்புறுத்துவதும் ஏதோ எல்லா சகோதரங்களும் அம்மா அப்பாவோடுதான் சேர்ந்து இருக்க வேணும் என்பதும் ஒரு  வன்முறைதான்

ஒரு பிள்ளையோடு தாய் தந்தை சேர்ந்து வாழலாம் மற்றவர்கள் விரும்பினால் வந்து பார்த்து போகலாம் பண உதவி வேண்டுமாகில் செய்யலாம் அதை விடுத்து கூட்டு குடும்பம் என்ற பேரிலை ஒரே  வீட்டிலை எல்லாரும் ஒரே சமையலறையில்  ஒரே கழிவறையில் காலத்தை கடத்துவதுக்கு பேர் கூட்டுக்குடும்பமாம்,

முதல் இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் செயலாகும், ஒவ்வொருத்தரும் தன் வீடு என்று வரும் போது தன் வீட்டை தானே சுத்தமாக வைத்திருக்க பழகி கொள்வினம், மற்றவர்களோடு சேர்ந்திருந்தால் நான் ஏன் வேலை செய்யணும் மற்ற ஆளு செய்யட்டும் என்ற வீண் விவாதங்களும்  வேலை செய்ய, வீட்டை சுத்தமாக வைக்க பஞ்சிபாடும் வருவதோடு சண்டைகளும், நோய்களும் இங்கு வரதானே செய்யும் கேட்டால் இது நம்ம நாட்டு கலாசாரம் என்பார்கள்

ஒரு குடும்பம் தனிய இருந்தாலே வருமானம் போதாட்டி சண்டைதான் வருகிறது இருந்தாலும் வருமானத்துக்கு தக்கமாதிரி வாழதானே வேணும்? இது கும்பல்லிலை கோவிந்தா என்றால் யார் காசிலை யாரு சாப்பிடுறது என்றே தெரியாது

இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?

இந்த சின்னதிரை இப்படியான கதைகளைதான் எடுத்துககாட்டுது ஒரு சின்னத்திரையிலை மாமியார் மருமக்களின் நகைகளை கூட வாங்கி பூட்டி வைச்சுடுறா நல்ல நாள் பெரியநாளுக்கு போடுறத்துக்கு எடுத்து கொடுத்துப்போட்டு பிறகு வாங்கி திருப்பி  அலுமாரியில் வைத்து பூட்டி கொத்து சாவி அவ இடுப்பிலை

இது என்ன அனியாயம்? பெண்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த நகையை கூட தினமும் போட அனுமதியில்லை

புருஸன் உழைத்த காசிலை நின்மதியாக வாழ முடியா நிலை இதுக்கு பேரு கல்யாணம் குடும்பம், இது இந்தியாவிலை நடக்கிற கூத்து அதைதான் சின்னத்திரைகள் எடுத்து காட்டுது

சண்டையும் துரோகங்களும் வீட்டுக்குள்ளே! அடக்கு முறை சட்டமும் அழுகையும் அதே வீட்டுக்குள்ளே!

இந்த கதைகளைதான் வெளிநாட்டில் வாழும் தமிழரும் காசு கொடுத்து இணைப்பை எடுத்து அழுது அழுது பார்கிறார்கள்,

ஒரு தனிமனிதனையே திருத்த முடியாத உலகத்தில் ஒரு நாட்டையே திருத்த முடியுமா? என்னாலே

 அழுவோரை நினைத்து அழுவதா சிரிபதா?

இல்லை கலாசாரம் என்று சொல்லி ஒரு கூட்டுக்குள்ளே குமிந்து வாழும் பன்றிகளை போலே வாழுகின்ற இந்த கலாசாரத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா?

யாரைதான் குற்றம்  சொல்லி  என்ன பயன்?

சிவ சிவ என்று நம்ம வழியை பார்த்து நடக்க வேண்டியதுதான்

what to do?

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen