Montag, 19. August 2019


தாலியும் வேலியும் 

தாலி என்பது தமிழ் பெண்ணுக்கு ஒரு வேலி போலே பாது காப்பு தரும் என்பதுதான் அன்றைய நம்பிக்கை!
தாலி கட்டாமல் ஒரு ஆணும் பெண்ணும் தனித்து சந்திக்க முடியாத ஒரு  காலம் ஊரிலை இருந்து.

அந்த வழக்கத்துக்கு அடிமையான பெண்கள் தாலி கழுத்தில் ஏறுவதை ஒரு பெரும் பேறாகதான் கருதினார்கள்
பெண்ணை பெற்றவர்களும் தன் மகளின் கழுத்தில் தாலி  ஏறும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் வாழுகிறார்கள்
தாலி கட்டி முடிந்தால்தான் பெண்ணின் கடமையை சரி வர செய்து விட்டதாக திருப்த்தி அடைந்த காலம் இருந்தது.

இன்று புலம் பெயர்வாழ்விலும், ஊரிலும் எப்படியோ எனக்கு தெரியலை ஓருக்காவா தாலி கழுத்திலை ஏறுது? ஒன்றை கழட்டி மறு தாலி மாறி மாறி ஏறுகின்ற காலமாகி போய்விட்டது அதை பற்றி நான் இன்று சொல்ல வரவில்லை .
அன்று தாலி கட்டும் போது மணப்பெண்ணுக்கு மெய் சிலிர்பதும் பெற்றவர் கண்களில் நீர் கசிவதும்
எல்லாம் ஒரு பெரிய காரியம் ஒப்பேறிய மன திருப்த்திதானே?
அந்த தாலி கழுத்தில் வந்த பின்னே அந்த பெண்ணுக்கு ஒரு அழகும், முகத்தில் ஒரு பொலிவும்,  நடையில் ஒரு பொறுப்பும் வந்ததும் என்னமோ உண்மைதான்.
தாலியை தொட்டு பார்க்கும் போது ஒரு மகிழ்வும்,  கண்ணாடியில் கழுத்தை பார்கும் போதும் ஒரு பரவசமும் வந்தது ஒரு பவுண் நகைகாக அல்ல அது அந்த தாலி கொடுத்த மதிப்புதான்.
தாலியை தொடும் போதெல்லாம் அதை கட்டிய கணவன் மேல் அன்பு பொங்கும் எல்லாம் காதலின் சின்னமாகதான் அன்று தாலியை கட்டுகிறார்கள்.

அந்த தாலியை காணும் போது மற்ற ஆடவர்களும் அந்த பெண்ணுக்கு மதிப்பை கொடுத்து விலகி நிற்பது வழக்கமாகி விட்டிருந்தது எல்லாம் அன்றைய காலம்,
அந்த தாலியை ஒரு பெண் மதிக்க காரணமான அந்த தாலியை கட்டிய கணவன் அந்த பெண்ணுக்கு உண்மையானவனாக, அன்பானவனாக, ஆதரவு கரம் கொடுத்து தன் உயிராக நினைத்து வாழந்தால்தான் அந்த தாலிக்கும் பெருமை அந்த தாலியை கழுத்தில்  போடுகின்ற பெண்ணுக்கும் பெருமை.

ஒரு தாலியை சுமந்து கொண்டு மனதிலை கணவனின் மேல் அன்பு இல்லாமல் இருந்தால், அந்த தாலிக்கு என்ன மதிப்பு? தாலியை கட்டிய கணவன் வேறு பெண்களோடு தன் பொழுதை போக்கிட்டு இருந்தால் அவன் கட்டிய தாலியை போடுவதால் பெருமையும் இல்லை, கட்டியவனின் ஆதரவும் அன்பும் கிடைக்காத போதும் அந்த தாலியை கழுத்தில் போட்டு ஊருக்கு எத்தனை பவுணிலை தாலி போட்டிருக்கிறோம் என்று சொல்வதுதான் இன்றை காலத்தில் அனேக பெண்கள் மத்தியில் உள்ள  வழக்மாகி விட்டது.

தாலியின் பெருமையும், தாலி கட்டியவன்மேல் உள்ள பாசமும் அந்த தாலியை கட்டிய கணவன் மனைவியை நேசிக்கும் வாழ்க்கை முறையோடே கலந்து பின்னி பிணைந்து இருக்கின்றது.

ஆரம்பத்தில் தாலி கட்டிய கணவன் போடுகின்ற தடைகள், சட்டங்கள் எல்லாம் பிடிக்குற மாதிரி இருக்கும், கால போக்கில் அவனது அதிகாரம் ஒரு பெண்ணை அடிமை நிலைக்கு தள்ளுமாகில் அந்த தாலியே கழுத்தை மெல்ல மெல்ல இறுக்கும் தூக்கு கயிறாகதான் மாறுகின்றது.

தாலிக்கும் வேலிக்கும் பெருமை பாதுகாப்பை தருவதே ஒளிய அடிமைகளை சிறையில் அடைபது போலே அடைத்து வைக்க அல்ல, ஆசையோடு கழுத்தில் போடும் தாலி ஒரு அழகு சாதன பொருள் என்று நினைக்கும் பெண்களும் உண்டு, தாலி என்பது ஒரு  பெண்ணுக்கு பாது காப்பும், பெருமையையும் கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணை பெற்றவர்களும் அன்று விரும்பியதும் தமிழ் பெண்கள் வேண்டுவதும் அதுவே!

அந்த தாலிக்கு மதிப்பை தருவதும், அதை அணியும் பெண்ணுக்கு பாதுகாப்பும் பெருமையும் கிடைக்க கூடியதாக வாழ்ந்து காட்ட வேண்டியது பெண்ணல்ல, அதை  அந்த பெண்ணின் கழுத்தில் கட்டிய ஆண்மகனும் என்பதே தான் நான் இன்று இங்கு சொல்ல வந்த விடயமாகும்.
ஏதோ ஒரு அழகான பெண்ணை பிடித்து தாலியை கட்டி விட்டால் அவள் விட்டு போட்டு ஓடி போக மாட்டாள் தன் காலடியில் அடிமையாக கிடந்து, வீட்டு வேலைகளை செய்து, பிள்ளைகளை பெத்துக் கொண்டு சொன்னதை கேட்டு வாயை மூடி மொளனியாக கிடக்கட்டும்  என்று நினைக்கும் ஆண்களும்,
தாலி கட்டியாச்சு எனி என்ன செய்ய போகினம்? பெண் ஒரு அடிமை என நினைத்து தன் பாட்டிலை திரிகிற ஆண்மகனாலுமே அந்த தாலி கழுத்தை விட்டு இறங்குகிற காரியம் பெண்களால் நடக்கின்றது.

இல்லையேல் கட்டியவன் மரணத்துக்கு பிறகுதான் இறங்குகிற தாலிஆண்களின் திமிரான போக்காலும், புரிந்துணர்வில்லாத குடும்ப வாழ்க்கையாலும்,
 ஒற்றுமையான வாழ்வும் இல்லாமல் போவதால் மரணங்கள் காணும் முன்பே மணமுறிவு வருகிறது, தாலிக்கும் மதிப்பு இல்லை அது தந்த மணவாழ்வுக்கும் பெருமை இல்லை!
மரணத்தின் முன்பே தாலி கழுத்தை விட்டு இறங்கும் காலம் மணவாழ்வுக்கு மரணம்.
மணவாழ்வுக்கே மரணம்!

கவி மீனா


Keine Kommentare:

Kommentar veröffentlichen