Montag, 19. August 2019


மனைவிக்கு

1.துணைவி 2. கடகி 3. கண்ணாட்டி 4. கற்பாள் 5. காந்த 6. வீட்டுக்கா 
7. கிருகம் 8. கிழத்தி 9 குடும்பினி 10. பெருமாட்டி 11. பாரியாள் 
12. பொருளாள்
13. இல்லத்தரசி 14. மனையுறுமகள் 15. வதுகை 16. வாழ்க்கை 17. வேட்டாள்
18. விருந்தனை 19. உவ்வி 20. சானி 21. சீமாட்டி 22. சூரியை 23. சையோகை
24. தம்பிராட்டி 25. தம்மேய் 
26. தலைமகள் 27. தாட்டி 28. தாரம் 29. மனைவி
30. நாச்சி 31. பரவை 32. பெண்டு 33. இல்லாள் 34. மணவாளி 35. மணவாட்டி
36. பத்தினி 37. கோமகள் 38. தலைவி 39. அன்பி 50. இயமானி
51. தலைமகள் 52. ஆட்டி 53. அகமுடையாள் 54. ஆம்படையாள் 55. நாயகி 56. பெண்டாட்டி
57. மணவாட்டி 58. ஊழ்த்துணை 59. மனைத்தக்காள் 60. வதூ
61. விருத்தனை 62. இல் 63. காந்தை 64. பாரியை 65. மகடூஉ 66. மனைக்கிழத்தி
67. குலி 68. வல்லபி 69. வனிதை 70. வீட்டாள் 71. ஆயந்தி 72. ஊடை

ஒரு மனைவிக்கு அதாவது இல்லத்தரசிக்கு இத்தனை பேரு உண்டாம் காரணம் என்ன தெரியுமா?
எல்லாமாகி நிற்பவள் மனைவி அதனாலேதான் இத்தனை பேரு அவளுக்கு!
இதை புரியாத ஆணுக்கு ஒரே ஒரு பேரு முட்டாள் என்று!

அவளே வீட்டில் அரசி, அனைத்தையும் கட்டி காப்பவள், அவளின்றி அணுவும் அசையாது, அவளில்லாது போனால் ஆணுக்கு ஆதோ கதிதான்!
 தெரு நாய்கும் துணையில்லா ஆணுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை!
தெருநாய் கண்ட இடத்தில் காலை தூக்குது மனைவியை இழந்த ஆண் கண்ட இடமெல்லாம்  கையை நனைக்குது!

கூட இருபது சக்தி என அறியாத கணவனுக்கு மனைவி கைவிட்டு போன பின் தேகத்திலும் சக்தி இருபதில்லை
எது உண்மையான பெருமை என்பதை அவனாக உணர வேணும்
மேடைகளில்  இடிமுழக்கமாக பேசினாலும்   பக்கத்திலே மனைவி இல்லாவிடில் கூட்டத்திலே அவனுக்கு மதிப்பு இல்லை!

தான் ஒரு நல்ல குடும்பஸ்தனாக வாழ்ந்து காட்டினால்தான் மேடையில்
ஏறி அடுத்தவனை வாழ்த  ஒருவனுக்கு தகுதி உண்டு,
தன் குடும்பத்தை பார்காதவனுக்கு பேரு தறுதலை!  மானம் மரியாதை எல்லாம் ஒரு நல்ல குடும்பஸ்த னுக்கு மட்டுமே போய் சேரும்.
தாய்கு நல்ல மகனாய், மனைவிக்கு நல்ல புருஸனாய், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் வாழ்ந்து காடுபவனே ஒரு நல்ல மனிதன்,
இது ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு உள்ள கடமை, கடைமையை செய்ய தவறியவன் ஒரு மனிதனாக மதிக்க படமாட்டான்.
மனிதனாக பிறந்து தன் கடமைகளை செய்ய தவறுபவனுக்கு கடவு ளே தண்டனைகளை கொடுக்கின்றார்,  கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து சோரம் போரவனுக்கு  சொரி சிரங்கு முதல் சகல ரோகங்களும் கடைசியில் வரதான் செய்யும்.
அவனது மனசாட்சியே அவனை ஒரு நாள் கொல்ல தொடங்கும்  சாகும் வரை மரண தண்டனை நித்தம் கொடுக்கும்.

சாப்பிடும் போது இனிக்கிற இனிப்பு காலம் செல்ல சல ரோகத்தை கூட்டுவது போலே, உடனே இனிக்கிற சல்லாபமும், கள்ள காதல் கழியாட்டங்களும்,  மேடை கொளரவமும் எத்தனை நாளைக்குதான் இனிக்க போகிறது?
கடைசியிலே தவித்த வாய்கு தண்ணி கொடுக்க யாருமே வர போவதில்லை!

மனைவி கையால் கிடைத்தால் அது சுடு சோறு அடுத்தவன் இரக்கபட்டு கொடுத்தால் அது பழம் சோறு!
பதவியும் இளமையும் இருக்கும் வரைதான் சனம் கூடும் முதுமையும் நோயும் பிணியும் சேரும் போது,
செத்த நாயிலை உண்ணி களருவது போலே ஒட்டி நின்ற சனம் ஒன்றொன்றாய் களன்று போகையில்  மமதை கொண்டு அலைந்தவனுக்கும் சுடலை ஞானம் வரத்தான் செய்யும்.

நல்லதொரு மனைவியின்  அன்பை இழந்து அவளது சொத்துக்கும், பொருளுக்கும் ஆசைபட்டு அவளை நசுக்கி வாழ்ந்த மனிதனுக்கு கடைசியிலே கடவுளின் தண்டனையில் நசுக்கபடும் போது விழங்கும் மனைவியை ஏமாற்றியதற்கும், செய்த துரோகங்களுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்பது.

காலம்கடந்து மீண்டும் திரும்பி பார்தால் பூட்டிய கதவு திறக்காது உடைந்த இதயம் மீண்டும் பொருந்தாது!
அடுத்தவனுக்கு தான் விழுந்தும் மீசையிலே மண் ஒட்டாத போலே நடித்து சிரித்து உள்ளுக்குள்ளே புழுங்கி அழுது
தேசமெல்லாம் ஓயாது தனி நடையாய் ஓடிய கால்கள் எனி சுடுகாடு நோக்கி பொடி நடையாய் போவதுதான் நியதி! இதுதான் அவன் தேடிய தலை விதி!
கவி மீனா

1 Kommentar: