Sonntag, 24. Dezember 2017

ஒன்று என்று எண்ணும் மனம்

ஆயர் குலத்து கண்ணனும் கடவுளாகினான்
ஆடுகள் மேய்பவனாம் யேசுவும் தெய்வமாகினான்
நல்லதை எடுத்து  சொல்ல கடவுள் தோன்றினார்
ஆசியாவில் தோன்றியதால் கண்ணனாகினான்

ஐரோப்பாவில் தோன்றியதால் யேசுவாகினான்

யேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்
கண்ணனையும் அம்பால் எய்து கொன்றனர்
இரத்தம் சிந்தவே கடவுளும் மனிதனாகினான்
கடவுள் ஒன்று என்று எண்ணும் மனம் வேண்டுமே
உன் மதம் என் மதம் என்று மதம் பிடிக்க வேண்டாமே


அவன் அவன் பாவத்துக்கு 
தண்டனை நிச்சயம் உண்டு
இதை பைபிள் மட்டும் சொல்லவில்லை
பகவத் கீதையும் சொல்கிறதே
யாதும் அறிந்தவனுக்கு மதம் இல்லை
ஞானம் பெற்றவனுக்கு கோவில் இல்லை

கடவுள் என்பவன் நம் கூட்டில்
நமக்கு வேண்டாம் வம்பு அடுத்த வீட்டில்
யாருக்கு இந்த உண்மை புரியுமோ?

கவி மீனா





Keine Kommentare:

Kommentar veröffentlichen