Freitag, 25. März 2016

கடவுள் கரம் நீட்டுவார்
ஒரு தமிழ் பிராத்தனை வைக்கிற இடத்திலை ஒரு நாள் இந்தியாவிலிருந்து வருகை தந்த அவர்களது பாதிரியார் ஒருவர் ஒரு கதை சொல்லி கொண்டிருந்தார்.
அதாவது ஒரு பிராமணன் தினமும் குளத்திலை குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு போய் பூசை செய் வானாம் அந்த ஏழை பூசாரி தினமும் பக்தி சிரத்தையோடு மந்திரங்கள் சொல்லி கொண்டு கோவிலுக்கும் குளத்துக்குமாக போகும் பாதையிலுள்ள சேச் பாதிரியாரான அவர் இதை கவனித்துக் கொண்டே இருந்தாரம்.
ஒரு நாள் அந்த சேச்சில் அதாவது தேவாலயத்தில் ஒரு பெருநாள் என்பதால் வெளியே வாசலில் நின்று அந்த பாதிரியார் பிராத்தனை செய்து கொண்டிருக்கும் போது கூட்டமாக நின்ற சனங்களுக்கு முன் வரிசையில் அந்த பிராமணனும் நின்று கொண்டிருப்பதை அந்த பாதிரியார் கவனித்ததுக்கொண்டே இருந்தார்,
கடைசியாக பிராத்தனை முடிந்ததும் பாதிரியார் அந்த பிராமணனை அணுகி நீங்கள் முழு நேரமும் இங்கே நின்று கேட்டுக்கொண்டிருந்தீர்களே எனது பிராத்தனை எப்படி இருந்தது என வினாவினாராம்.
அப்போது அந்த பிராமண பூசாரி சொன்னது என்னவெனில் பெரியவரே பாதிரியாரே நீங்கள் என்னமோ கனக்க பேசிக்கொண்டிருந்தீர்கள் அது ஒன்றும் என் காதில் விளவில்லை ஆனால் எனக்கு உங்களுக்கு பின்னாலே உயரத்தில் நீங்கள் சொல்கிற யேசு நிற்பது தெரிந்தது அவர் என்னை பார்த்துக்கொண்டு நின்றார் அதனால்தான் நானும் நின்றேன் என்றானாம்.
இதை கேட்ட பாதிரியார் அப்படியா இப்போதாவது உனக்கு எந்த மதம் உண்மை என்பதை விளங்க முடிகிறதா? என கேட்டாராம் என இங்கு வந்து போதனை செய்த பாதிரியார் இந்து மதத்தை அதாவது சைவ சமயங்களை இழிவு படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஆனால் அந்த பாதிரியாருக்கு விளங்கவில்லை  அந்த பிராமணன் கண்ட யேசுவை அவர் காணவில்லை என்பது!
அடுத்த மதங்களை தூற்றுவதால் மட்டும் கடவுளை காணமுடியாது  உண்மையான பக்தி இறைவனிடம் இருந்தால் கடவுள் எந்த வடிவில் நின்றாலும் எமது கண்ணுக்கு தெரிவதுடன் எமக்கு துன்பங்கள் வரும் போது கைகொடுத்து உதவவும் கடவுள் கரம் நீ ட்டுவார் என்பதுதான் உண்மை.
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen