Samstag, 28. Mai 2016

விழாம்பழம்


பல காலத்தின் பின் அகப்பட்டது ஒரு விழாம்பழம்
சும்மா விடுவனா? அடித்து உடைத்து
பழத்தை கரண்டியால் தோண்டி எடுத்து சக்கரை போட்டு
குளைத்து சாப்பிட்டால் ருசியோ ருசி
புளிப்பும் இனிப்பும் கலந்த நல்லதொரு சுவை.

விழாம்பழம் ஒரு தெய்வீக பழமாக கருதுவதால்தான் கோயில் பூசைகள், சரஸ்வதி பூசை போன்ற நேரங்களில் கடவுளுக்காக நெய்வேத்திய பழமாக இதை உபயோக படுத்துகிறார்கள்.
விழாம்பழம் ஆனைக்கும், ஆனை முகத்தோனுக்கும் பிடித்த பழமாம் இதை நாள்தோறும் நாம் உண்டு வந்தால் எமக்கு மனக்கட்டுபாடும்,
மனோ வலிமையும் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் சித்தர்கள்.

அத்துடன் பித்தத்தால் வரும் நோய்களையும் செமிபாட்டு  கோளாறுகளையும் இந்த பழம் போக்க வல்லதாம்
நித்தமும் கிடைத்தால் சாப்பிடலாம் ஆனால் எமக்கு ஆது அரு மருந்தாக அல்லவோ இருக்கின்றது.
ஊரிலை வாழும் காலத்திலும் இந்த மரம் பெரிய வளவுகள் உள்ள இடங்களில் காணப்படும், நகரங்களில் ஒரு சில மரமே காணக்கூடியதாக இருந்தது.

அன்று வூட் அப்பிள் இருக்க மேலை நாட்டு அப்பிளை தேடி அலைந்தார்கள் மேலை நாட்டில் வாழும் என் போன்றவர்களுக்கு ஊரை ஞாபக படுத்தும் இப்பழம் சுவையும் அதை சாப்பிடும்போது மனதுக்கு ஒரு நிறைவையும் தருகிறது என்பது உண்மைதான்.


கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen