Dienstag, 22. September 2015


மனிதன் மட்டும்

எறும்பு ஓடி ஓடி பாடு பட்டு
ஒற்றுமையாய் வாழுது

குழவி கூட கூடு கட்ட
இடம் பார்க்குது

குருவி கூட குஞ்சுக்கு
இரை தேடி செல்லுது

கிளிகள் கூட கொஞ்சி குலவி
கதை பேசுது

சோறு போட்டால் நாய்கள் கூட
வால் ஆட்டுது

மனிதன் மட்டும் நன்றி கெட்டு திண்ட
 வீட்டுக்கே இரண்டகம் பண்ணுறான்

மனிதன் மட்டும் வீடு இருந்தும்
அடுத்த வீட்டை பார்க்கிறான்

தன் வீட்டு கஞ்சலை பொறுக்காமலே
அடுத்த வீட்டு குப்பை பற்றி
கதை பேசுறான்

இவன் வாலில்லா குரங்கு என்று 
தன்னை நிலை நாட்டுறான்

ஆசையிலே தாவி தாவி திரிவதனால்
இதை இவன் நிலை நாட்டுறான்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen