Sonntag, 26. Juli 2015


விரதம்

 

(நித்தம் நித்தம் நீராடில்

நெடுமால் அருளை பெறலாமேல்

தத்தும் தவளை மீன்களும் அத்

தனிபேறடைய வேண்டாவோ?)

 

சிலர் விரதம் என்கிறார்

தினமும் குளிக்கிறார்

ஒழுங்கா கோவில் போகிறார்

மனசு சுத்தமா இருக்குதா

தெரியவில்லை

 

விரதம் என்று சிலர் ஊரை ஏமாற்றலாம்

கடவுளை ஏமாற்ற முடியுமா?

முதல் நாள் உண்ட மச்சம் வயிற்றில் இருக்க

மிச்ச கறியும் பிரிஜ்ஜில் இருக்க

மச்ச சட்டியிலே மரக்கறியை சமைத்து

மூக்கு முட்ட பிடிப்பது விரதமாகுமா?

 

கோயிலுக்கு போனால் அடுத்தவரின்

நகையை கண்ணு பார்க்க

சேலையின் விலைகளை மனசு எடை போட

கடைகளில் மலிவு விற்பனையில்

வாங்கி  மூட்டை கட்ட மனம் துடிக்க 

கைகள் மட்டும் கூப்பி என்ன பயன்?

 

இடிச்சு பிடிச்சு   கோவிலுக்கு  போவது

கடவுளை காணும் மனசுடனா?

இளசுகள் ஓடுதுகள் ஜோடியை காண

பெரிசுகள் போவது பொருட்களை அள்ள

 

சுவாமி தரிசனம் கண்கள் காணுமா?

ஆசைகளைதான் மனசு துறக்குமா?

ஓம் என்னும் வார்தையை உள்ளம் சொல்லுமா?

உள்ளம் உருகி அம்பிகை பாதம் பணியுமா?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen