Sonntag, 26. Juli 2015


பழ புளி (உண்மை கதை)

 பழ புளி என்றதுமே நான் கேள்வி பட்ட ஒரு உண்மையான சம்பவம் என் ஞாபகத்துக்கு வருகிறது.

யாழ்பாணத்திலே வீட்டுக்குள்ளேயே வளர்ந்த, வெளி உலகம் தெரியாமல் இருந்த ஒரு பெண்மணி திருமணத்துக்கு பிறகு ஒரு ஒதுக்குப்புறமான  சிங்கள ஊரிலே  கணவருடன் குடியிருக்க சென்றார்.

 அவருக்கு ஆங்கிலமோ சிங்களமோ தெரியாது.

 

அவரது கணவர் அவவுக்கு ஒரு  மலை நாட்டு பொடியனை வீட்டு வேலைகள் செய்ய என உதவிக்கு பிடித்து கொடுத்தார் காரணம் அவர் வேலைக்கு போனால் மாலைதானே வீடு வந்து சேருவார்.

தினமும் அந்த வேலைகார பொடியன்தான் கடைக்கு போய் தேவையான பொருட்களை வாங்கி வருவான் அன்று ஒரு நாள் சமையலுக்கு என்ன தேவை என பார்த்த போது பழபுளி இல்லை என கண்ட அவன் ஓட்டமாக  ஓடி வந்து அம்மா புலி புலி என்று சொன்னான்.

 அந்த பெண்மணிக்கு இவனுக்கு தமிழ் சரியா கதைக்க தெரியாது என்பதை மறந்து காட்டு பக்கத்திலே இருப்பதாலே  புலி வந்துட்டோ என நினைச்சு ஓடி போய் அறைக்குள் புகுந்து  கதவை தாழ்பாழ் போட்டு கொண்டு இருந்து விட்டார், வேலை கார பொடியன் எத்தனை முறை கதவை தட்டியும் அவ கதவை திறக்கவே இல்லை  அவனும் களைத்து போய் பேசாமே  போய்விட்டான்.

 

அன்று மாலை கணவர் பசியோடு வீட்டை வந்தால் சமையல் மணமும் இல்லை சமையல் கட்டிலே உணவும் இல்லை வேலை காரனும் பசியிலே சோர்ந்து சுருண்டு போய் படுத்து விட்டான்.

 மனைவியையும் வெளியில் காணாததால் அவர் அவனை எழுப்பி என்னடா அம்மா எங்கே ஏன் சமைக்கவில்லை என கேட்டார்,

அதற்க்கு அவன் அம்மா ஓடி போய் கதைவை பூட்டி கொண்டு திறக்கவே இல்லை சமைக்கவும் இல்லை,

நான் சமையலுக்கு பழ புளி  இல்லை என்று சொன்ன கையோடே அம்மா போனவதான் இன்னும் கதவை திறக்கவில்லை என அவரிடம் சிங்களத்திலே விளக்கமாக சொல்லிட்டான்.

 

அவரும் உடனே பயந்து போய் கதவை தட்டி நான் வந்து இருக்கன் கதவை திற என கூப்பிட்ட பிறகுதான் அவ கதவை திறந்து புலி ஓடி போட்டுதா? என கேட்டார்,

புலியா? புலி எங்கே வந்தது?  என அவர் ஆச்சரிய பட்ட போது அவ சொன்னா இவன்தான் புலி புலி என்று ஓடி வந்தவன் நான் பயத்திலை கதவை பூட்டி போட்டு இருந்தனான் நீங்கள் வரும் வரை என சொல்ல பசியோடு வந்த கணவருக்கு எப்படி இருக்கும்?

அட கருமமே! அவன் சமையலுக்கு பழ புளி இல்லை என்று அல்லே சொன்னான் என சொன்னார்.

இல்லை அவன் புலி என்றுதானே சொன்னான் என்று அவ சொல்ல, அன்றைய பொழுது ஒரு தமிழ் சொல்லை பிழையாக சொன்னதாலே இப்படி பசியோடும் பயத்தோடும் கழிந்ததாம் இது உண்மையாக நடந்த கதை.

அந்த பெண்மணி வேறே யாரும் இல்லை எனது தாயார் என்பதை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.

வடிவான, படித்த கொழும்பு மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு முதல் முதலாக வெளியிடத்தில் வாழ போன பெண்ணுக்கு நடந்த கதை இது.

 

கண்ணே தங்கச்சி கண்ணே புருஸன் வீட்டில் வாழ போகும் பெண்ணே!`

 

(எனக்கே கொஞ்சம் டவுற்றாக தான் இருக்கு ல ள ழ விலே ஹஹ ஹஹ)

 
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen